Monday, July 27, 2009

இஸ்லாம் பற்றி அண்ணல் அம்பேத்கார்





(இக்கட்டுரையில் உள்ள அனைத்து வரிகளும் அண்ணல் அம்பேத்கார் எழுதியவை.சுருக்கமான மொழிபெயர்ப்பு மட்டும் எனது)

இந்துமதத்தில் உள்ள சமூக இழிவுகளை மாயோவின் மதர் இந்தியா அம்பலப்படுத்தியது. ஆனால் மதர் இந்தியாவை படிக்கும் வெள்ளையர்கள் இந்துமதத்தில் சமூக இழிவுகள் இருக்கிறது, இஸ்லாமில் இல்லை என்றும் இந்துக்களோடு ஒப்பிட்டால் முஸ்லிம்கள் முற்போக்கானவர்கள் என்றும் கருதுவார்கள். இஸ்லாமிய சமூகத்தை நன்கு அறிந்தவர்களுக்கு இம்மாதிரி கருத்துக்கள் ஆச்சரியத்தையே வரவழைக்கும்.

இந்துக்களிடம் நிலவும் குழந்தை திருமணம் எனும் இழிவு இஸ்லாமிலும் உள்ளது. தலாக் எனும் விவாகரத்து இஸ்லாமிய பெண்களிடம் இருக்கும் மனநிம்மதியை அடியோடு அழித்துவிடுகிறது. இஸ்லாமியர்கள் நான்கு பெண்களை சட்டப்படி திருமணம் செய்து கொள்ளலாம். இந்துக்கள் எத்தனை பெண்களை வேண்டுமானால் திருமணம் செய்யலாம் என்ற விதி அவர்கள் மதத்தில் இருப்பதால் நான்கு மனைவியரை மட்டும் மணக்க அனுமதிக்கும் இஸ்லாம் இதை விட மேலானதல்லவா என கேட்கலாம். ஆனால் இப்படி கேட்பவர்கள் முஸ்லிம்களுக்கு எத்தனை அடிமைபெண்களை வேண்டுமானாலும் வைத்திருக்கும் உரிமை இருப்பதை மறந்து விடுகின்றனர்.

அதனால் இந்துக்களை விட முஸ்லிம் சட்டம் இந்த விஷயத்தில் முற்போக்கானது என்று என்னால் கருத இயலவில்லை.

பலதாரமணம், வைப்பாட்டிகளை வைத்திருப்பது (அடிமைகளை வைப்பாட்டிகள் என்று குறிப்பிடுகிறார் அம்பேத்கார்) என்று பல இழிவுகளால் இஸ்லாமிய பெண்கள் தவிக்கின்றனர்.

இஸ்லாமும் ஜாதியும்:
ஜாதிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இஸ்லாமில் ஜாதியும் அடிமை முறையும் இருக்க கூடாது என்று அனைவரும் நினைக்கிறோம். அடிமைமுறை எத்தனை இழிவானது? நல்லவேளை அது இப்போது சட்டம் போட்டு தடுக்கப்பட்டு விட்டது. அடிமைகளை நல்லமுறையில் நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் கட்டளை இட்டிருந்த போதிலும், அப்படி அவர் சொன்னது பாராட்டக்கூடியது என்ற போதிலும், இழிவான இந்த அடிமை முறையை ஒழிப்பது பற்றி இஸ்லாமில் சிறிதளவேனும் எதுவும் சொல்லப்படவில்லை.

அடிமை முறை இஸ்லாமில் ஒழிந்தாலும் இன்னும் ஜாதி இஸ்லாமை விட்டு ஒழியவில்லை. இஸ்லாமில் ஷேக், சைய்யது, மொகல் , பதான் என்று நான்கு சாதிக்குழுக்கள் இருக்கின்றன. இதில் வங்கத்தில் அஷ்ரஃப் மற்றும் அஜ்லஃப் எனும் பிரிவுகள் இருக்கின்றன. அஷ்ரப் ஜாதியினர் உயர்ஜாதியினராகவும், உயர்குடிப்பிறப்பாளர்களாகவும் கருதப்படுகின்றனர். அஜ்லப் பிரிவினர் இழிவானவர்கள், கீழானவர்கள் என்று தூற்றப்படுகின்றனர். இன்னும் சில இடங்களில் அர்சல் அல்லது கீழினும், கீழானவர்கள் எனும் ஜாதியும் இருக்கிறது. இவர்களோடு எந்த முஸல்மானும் சம்பந்தம் வைத்துக்கொள்ள மாட்டான். மசூதியிலோ, இடுகாட்டிலோ நுழைய இவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

மேலே சொன்ன நான்கு சாதிக்குழுக்களிலும் இந்துமதத்தை போலவே இஸ்லாமிலும் பல சாதிகள் இருக்கின்றன.

அஷ்ரப் அல்லது உயர்சாதி முஸ்லிம்களிடையே இருக்கும் சாதிகள்

(1) Saiads.
(2) Sheikhs.
(3) Pathans.
(4) Moghul.
(5) Mallik.
(6) Mirza.

அஜ்லஃப் அல்லது தாழ்ந்த சாதி முஸ்லிம்களிடையே இருக்கும் சாதிகள்

(1) Cultivating Sheikhs, and others who were originally Hindus but who do not belong to any functional group, and have not gained admittance to the Ashraf Community, e.g. Pirali and Thakrai.
(2) Darzi, Jolaha, Fakir, and Rangrez.
(3) Barhi, Bhalhiara, Chik, Churihar, Dai, Dhawa, Dhunia, Gaddi, Kalal, Kasai, Kula Kunjara, Laheri, Mahifarosh, Mallah, Naliya, Nikari.
(4) Abdal, Bako, Bediya, Bhal, Chamba, Dafali, Dhobi, Hajjam, Mucho, Nagarchi, Nal,Panwaria, Madaria, Tunlia.

அர்சல் அல்லது கீழ்மைப்படுத்தப்பட்ட சாதி( degraded classஎன்கிறார் அம்பேத்கார்)

Bhanar, Halalkhor, Hijra, Kasbi, Lalbegi, Maugta, Mehtar.

மேற்குவங்கத்தில் காணப்படும் இந்த சமூக இழிவுகள் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அனைத்திலும் காணப்படுகின்றன. மேலும் இந்துமதத்தில் உள்ளதுபோலவே இஸ்லாமிலும் தீண்டாமையை முஸ்லிம்கள் கடை பிடிக்கின்றனர்.

இந்துக்களிடம் காணப்படும் அனைத்து சமூக இழிவுகளும் இஸ்லாமில் காணப்படுகின்றன. சொல்லப் போனால் இந்துமதத்தை விட அதிகமான சமூக கொடுமைகள் இஸ்லாமில் காணப்படுகின்றன. உதாரணத்துக்கு இந்து மதத்தில் இல்லாத பர்தா முறையை சொல்லலாம்.

இதன்பின் பர்தாமுறையின் சமூக கேடுகள், அதன் பின்னிருக்கும் பெண்களின் மேலான சந்தேகம் ஆகியவற்றை மிக விரிவாக விளக்குகிறார் அம்பேத்கார். முஸ்லிம்கள் ஏன் சமூக முன்னேற்றத்தை தடுக்கின்றனர், இஸ்லாமில் சமூக விடுதலை சாத்தியமா என்றெல்லாம் விரிவாக விளக்குகிறார் அம்பேத்கார்.

Thanks:Senthil

3 comments: