Wednesday, November 18, 2009

இஸ்லாம் வாளால் பரவியதா?


முன்னுரை: இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஏகமாக சொல்கிறார்கள். ஆனால், முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களே போதும், நமக்கு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வதற்கு. மற்ற நாட்டு மன்னர்களுக்கு முகமது கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார், அபுமுஹை அவர்கள் அக்கடிதங்களின் தமிழ் மொழியாக்கத்தை பதித்துள்ளார். இக்கடிதங்களை ரஹீக் என்ற புத்தகத்திலிருந்து பதித்ததாக, அபுமுஹை அவர்கள் குறிப்பு எழுதியுள்ளார்கள்.
இக்கட்டுரையில் நாம் கீழ் கண்ட இரண்டு விவரங்களைக் காணப்போகிறோம்.



1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்.

2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?







1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்


முகமது எட்டு அரசர்களுக்கு கடிதம் மூலம் இஸ்லாமை தழுவும் படி அழைப்பு விடுத்ததாக அபூமுஹை அவர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இக்கடிதங்கள் ஆங்கிலத்தில் முஹம்மத் டாட் நெட் என்ற தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டு மன்னருக்கு முகமது அனுப்பிய முதலாவது கடிதம் கிடைக்காததால், அதை நான் இக்கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளவில்லை, அக்கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்த கட்டுரைகளில் சிலவற்றில், எங்கெல்லாம் இஸ்லாமைக் கொண்டு முகமது மற்றவர்களை பயப்பட வைத்தாரோ, அங்கெல்லாம் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் போல" காட்சி அளிக்கும் படி மொழிபெயர்த்துள்ளார்கள்.

அவைகளைப் பற்றிய விவரங்களை கீழே காணலாம்:

ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு நமக்கு உபயோகமாக இருக்கும் என்பதால், இக்கடிதங்களை ஆங்கிலத்தில் நான் கீழே பதித்து, அதன் பக்கத்தில் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்த விவரஙகளைத் தருகிறேன். முழு கடிதங்களைப் படிக்க கொடுக்கப்பட்ட தமிழ் அல்லது ஆங்கில தொடுப்புக்களை சொடுக்கவும்.

வரிசை எண் எந்த நாட்டு அரசனுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டது தமிழில்(அபூமுஹை த‌ள‌ம் எழுதிய‌து) இக்கடிதம் ஆங்கில‌த்தில்
1. அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷிக்கு ….. நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய். .......

Source: http://abumuhai.blogspot.com/2008/07/1.html …. I call you unto the fold of Islam; if you embrace Islam, you will find safety, ….

Source: A Deputation to Abyssinia (Ethiopia)
2. எகிப்து மன்னருக்கு நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/2.html … I invite you to accept Islam. Therefore, if you want security, accept Islam.

Source: Letter to the Vicegerent of Egypt, called Muqawqas
3. பாரசீக மன்னருக்கு …நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/3.html …… Accept Islam as your religion so that you may live in security,….

Source: A Letter to Chosroes, Emperor of Persia
4. ரோம் நாட்டு மன்னருக்கு ….நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய்….

Source: http://abumuhai.blogspot.com/2008/07/4.html ……I invite you to embrace Islam so that you may live in security.

Source: The Envoy to Caesar, King of Rome
5. யமாமா நாட்டு அரசருக்கு ….குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html … Be informed that my religion shall prevail everywhere. You should accept Islam, and whatever under your command shall remain yours."

Source: A Letter to Haudha bin 'Ali, Governor of Yamama
6. சிரியா நாட்டு மன்னருக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.''

அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html From Muhammad, Messenger of Allâh to Al-Harith bin Abi Shamir. Peace be upon him who follows true guidance, believes in it and regards it as true. I invite you to believe in Allâh Alone with no associate, thenceafter your kingdom will remain yours."

Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered: "Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.

Source:A Letter to Harith bin Abi Shamir Al-Ghassani, King of Damascus
7. ஓமன் நாட்டு அரசருக்கு நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

Source: http://abumuhai.blogspot.com/2008/07/8.html If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."

Source: Letter to the King of 'Oman, Jaifer, and his Brother 'Abd Al-Jalandi



2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?

மேலே உள்ள சில கட்டுரைகளில்,

ஆங்கிலத்தில் "if you embrace Islam, you will find safety" என்று உள்ளதை

தமிழில் "நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.

ஆங்கிலத்தில் உள்ள வரிகளில் "ஒரு நிபந்தனை" இருப்பதை காணமுடியும், அதாவது, "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், பாதுகாப்பாக இருப்பீர்கள்" என்று உள்ளது. இதன் உள் அர்த்தம் என்ன? "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லையானால், பாதுகாப்பாக இருக்கமாட்டீர்கள், அதாவது நான் வந்து போர் புரிந்து, உங்கள் மீது வெற்றிக்கொள்வேன்" என்று பொருள். இந்த விவரத்தை மிகவும் தெளிவாக, முகமது ஓமன் நாட்டு மன்னருக்கு எழுதிய கடிதத்தில் விவரித்துள்ளார்.



ஓமன் நாட்டுக்கு முகமதுவின் கடிதம்:

...நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

...If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."


மேலே உள்ள கடிதத்தில் முகமது சொல்வதை கவனியுங்கள். ஓமன் நாட்டு அரசர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், தன் நாட்டை தானே ஆட்சி செய்யலாமாம். யார் யாருக்கு ஆட்சிப் பொறுப்பை தருவது? நான் ஆட்சி செய்யும் நாட்டில், எனக்கு யாரோ ஒருவர் கடிதம் அனுப்பி, இஸ்லாமை ஏற்றுகொள், அப்போது நீயே உன் நாட்டை ஆட்சி செய்யலாம் என்று சொன்னால், நான் என்ன காதில் பூவைத்து இருப்பேனா? ஒருவேளை எனக்கு இராணுவ பலம் குறைவாக இருந்தால், தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளமுடியும் [அப்படி தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இதனால் அல்லாவிற்கும், இஸ்லாமுக்கும் என்ன மேன்மை சொல்லுங்கள்?]. எனக்கு இராணுவ பலம் அதிகமாக இருந்தால், முகமதுவோடு போர் புரிவேன். எது எப்படியானாலும், இது தான் அல்லாவின் தீனை பரப்பும் விதமா? சிந்தியுங்கள்.

ஒரு வேளை முஸ்லீம்கள் இக்கடிதங்களுக்கு "அப்படி அர்த்தம் இல்லை, கிறிஸ்தவர்கள் பொய் சொல்கிறார்கள்" என்று சொல்லக்கூடும். ஆனால், சிரியா அரசன், இக்கடிதம் படித்து என்ன சொன்னார் என்பதை சிறிது படித்துப்பார்த்தால் புரியும், இஸ்லாமை முகமது எப்படி பரப்பினார் என்பதை. அந்த அரசன் "என்னிடத்திலிருந்து என் ஆட்சியை யார் பிடுங்க முடியும்?" என்றுச் சொல்கிறான், அப்படியானால், அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கும் என்று தெரிந்துக்கொள்ள ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.



அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.


Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered: "Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.



சிலர் சொல்லக்கூடும், முகமதுவின் இக்கடிதங்களுக்கு பலர் ஆமோதம் அளித்தார்கள், இஸ்லாமியர்களாக மாறினார்கள் என்று. உண்மை தான் பலர் அமோதம் அளித்தார்கள், சிலர் எதிர்த்தார்கள். இங்கு பிரச்சனை "இஸ்லாமின் கோட்பாடுகள், கட்டளைகள்" மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததா இல்லையா என்பதல்ல? முகமது இஸ்லாமை பரப்பிய விதம் சரியா? உடனே, முகமதுவை விட்டுவிட்டு மற்ற அரசர்களின் பெயர்களை குறிப்பிட்டு, இந்த நாட்டில் இப்படி அமைதியான முறையில் இஸ்லாம் பரவியது என்று சொல்லவேண்டாம், இப்போது கேள்வி, முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார்? என்பது தான். முகமதுவின் கடிதங்களில் உள்ள உண்மை என்ன? என்பதைப் பற்றியது தான்.




முகமது இஸ்லாமை வாளால் தான் பரப்பினார்:

இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்பதை காட்ட முஸ்லீம்கள், பல நாடுகளின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், முகமது எப்படி பரப்பினார் என்பதை இக்கடிதங்கள் படம் பிடித்துக்காட்டுகின்றன. இதற்கு முஸ்லீம்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? நான் ஒரு கேள்வியை கேட்கட்டும், அதாவது உலகத்தில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு, இந்திய அரசாங்கம் அல்லது வேறு ஒரு மேற்கத்திய நாடு அல்லது இராணுபலம் அதிகமாக உள்ள நாடு, கீழ் கண்டவாறு கடிதம் எழுதி அனுப்பினால், எப்படி இருக்கும்.



மான்புமிகு சூடான்/பாகிஸ்தான்/சௌதி அரேபியா etc... நாட்டு அதிபருக்கு, இந்தியாவின்/சைனாவின்/அமெரிக்காவின்/ஜெர்மனியின் etc... நாட்டு அதிபர் எழுதிக்கொள்வது. உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்.

நாங்கள் a/b/c/x/y/z etc.. என்ற இறைவனை வணங்குகிறோம், மற்றும் இத்தெய்வமே உண்மையானவர். எனவே, உங்கள் அல்லாவை தொழுவதை இனி விட்டுவிடுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால், இந்துத்துவத்தை / கிறிஸ்தவத்தை / புத்தமதத்தை / etc... ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்க‌ள் இஸ்லாமை விட்டு விட்டு எங்கள் தெய்வ‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌வில்லையானால், எங்க‌ள் இராணுவ‌ம் உங்க‌ள் நாட்டில் வ‌ந்து இற‌ங்கும், எங்க‌ள் வ‌லிமையை உங்க‌ளுக்கு காட்டுவோம். எங்க‌ள் மார்க்க‌த்தை ஏற்று, உங்க‌ள் இஸ்லாமை விட்டு விடுங்க‌ள் என்று உங்க‌ளுக்கு அழைப்பு விடுக்கிறோம். அப்ப‌டி நீங்க‌ள் மாற‌வில்லையானால், அல்லாவை வ‌ண‌ங்கும் மூஸ்லீம்க‌ளின் பாவ‌ங்க‌ள் எல்லாம் உங்க‌ள் மேல் சும‌ரும் என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மேலே உள்ள கடிதத்திற்கும், முகமது அனுப்பின கடிதங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள். இதை படித்தவுடன் கோபம் வரவில்லையா உங்களுக்கு? அப்படித்தான், முகமதுவும் தன் தெய்வமாகிய அல்லாவை பரப்ப, ஆயுதத்தையும், போரையும், சர்வாதிகாரத்தையும் பயன்படுத்தினார். அதற்கு இக்கடிதங்களே சாட்சிகள். இக்கடிதங்களையும், அவைகளில் உள்ள செய்திகளையும், உலகத்தில் உள்ள மக்களுக்கு எப்படி விளக்குவீர்கள்? என்ன நியாயத்தை கற்பிப்பீர்கள்? சாதாரணமாக, கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தாமல், பொன்னுக்கும் மண்ணுக்கும் ஆசைப்பட்டு பல அரசர்கள் பக்கத்து நாட்டு அரசர்கள் மீது போர் தொடுப்பார்கள். ஆனால், தன்னை ஒரு இறைவனின் தூதன் என்றுச் சொல்லிக்கொண்டு, உலகத்திற்கு அமைதியை கொடுப்பேன் என்றுச் சொல்லிக்கொண்டு, இரத்தம் சிந்தியது சரிதானா என்று சிந்தித்துப் பாருங்கள். இப்படியும் ஒரு மதத்தை பரப்பனுமா? என்று உங்களை நீங்களே கேள்வியை கேட்டுப்பாருங்கள்.


முகமதுவை விட மற்ற இஸ்லாமிய அரசர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் இஸ்லாமியர்கள்:

இஸ்லாமை பரப்ப இஸ்லாமிய அரசர்கள் வாளைப்பயன் படுத்தவில்லை, அவர்கள் தங்கள் நல்ல நடத்தையினால் தான் பரப்பினார்கள் என்றுச் சொல்லி, இஸ்லாமுக்காக பரிந்துப்பேசும் இஸ்லாமியர்கள் ஒன்றை கவனத்தில் வைக்கவேண்டும். இப்படி நீங்கள் செய்வதினால், நீங்கள் மேற்கோள் காட்டும் இஸ்லாமிய அரசர்கள், "முகமதுவை விட நல்லவர்களாக இருந்தார்கள்" என்பதை மறைமுகமாக நீங்கள் சொல்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் முகமது கடிதங்களை அனுப்பி, அரசர்களை இஸ்லாமுக்கு அழைத்து, வரவில்லையானால் தொலைத்துவிடுவேன் என்று பயமுறுத்தி இஸ்லாமை பரப்பினார், ஆனால், அவரை பின்பற்றியவர்கள் அப்படி செய்யவில்லை என்று நீங்கள் சொல்வதினால், என்ன தவறு செய்துள்ளீர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.


இறையடியான்

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/abumuhai/MletterSword.html

Tuesday, November 17, 2009

கல்வியிலிருந்து விலக்கப்படும் தலித்துகள்


வெறும் பட்டப் படிப்பு அல்லது சட்டத்துறைப் படிப்பு படித்து முடிப்பது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிகப் பயன் அளிக்காது. இந்துக்களுக்குக்கூட அது அதிக பலன் அளிக்கவில்லை. எது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவுமெனில், விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் உயர்தர கல்வி கற்பதுதான்'' -அம்பேத்கர்.

''.....கணிதம், கணிப்பொறி அறிவியல் போன்ற முதன்மை பாடப் பிரிவுகளில் தலித் மாணவர்கள் மிகமிக சொற்ப அளவில் பெயரளவிற்கே சேர்க்கப்படுகின்றனர். உயர் சாதி மாணவர்கள் ஒதுக்கித்தள்ளும் வரலாறு, விவசாயம் மற்றும் இன்னபிற கடைநிலை பாடப்பிரிவுகளையே தலித் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சூழ்ச்சிகரமாய் அளிக்கிறது. மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விகள் பயில்வதற்கு தலித் மாணவர்கள் தகுதி பெற்றவர்களாகிவிடக்கூடாது என்கிற மனுதர்ம மனோபாவத்துடன் பள்ளி நிர்வாகம் இத்தகைய சமூக அநீதியை சமீப காலங்களில் திட்டமிட்டு இழைத்து வருகிறது'' - ஆதிதிராவிடன் புரட்சிக் கழகம்.

இந்திய சமூகத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் தங்களின் சமூக நிலையினை முன்னேற்றிக் கொள்வதற்கு (மேற்கத்திய) கல்வியை கற்றுக் கொண்டு அதன் மூலம் வேலையையும் பொருளாதாரத்தையும் பெறுவதால் சமூக சமத்துவத்தை அடையமுடியும் என்கிற வாதம் இருந்து வருகிறது. இதனால் தலித்துகள் கல்வி கற்பதற்கென அரசாங்கம் கொள்கை அளவில் சில சலுகைகளைக் கொடுத்து வருகிறது. (தலித்தல்லாத மாணவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் தலித் மாணவர்களுக்கு மட்டும்தான் சலுகைகள் வழங்கப்படுவது போன்ற பொய்ப் பிரச்சாரம் இருந்து வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்). சலுகை குறித்த விவாதத்தில் அதனை எதிர்ப்பவர்களும் , ஆதரிப்பவர்களும் உண்டு.

கல்வி தலித் மற்றும் பழங்குடியினரை முன்னேற்றியிருக்கிற அதே சமயம் அது அவர்களின் சொந்த பந்தங்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது என்ற வாதமும் இருக்கிறது. ஆனால் இங்கு எழுப்பப்பட வேண்டிய அடிப்படையான கேள்வி: கல்வியை கற்றல் என்பது வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கே என்றால் வேலை வாய்ப்பினை தருகின்ற கல்வியை தலித்துகளால் கடந்த காலங்களில் எளிதாகப் பெறமுடிந்திருக்கிறதா? இன்று பெறமுடிகிறதா? வேலை வாய்ப்பிற்கான கல்வியை அடைவதிலிருந்து தலித்துகள் தொடர்ந்து விலக்கப்பட்டே வருகின்றனர், அதனைப் பெறுவதற்கு தலித்துகள் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலே நிலவி வருகிறது என்று கட்டுரை விவாதிக்கிறது. கல்வியிலிருந்து விலக்கப்படுவது குறித்த விவாதம் புற உலகில் இல்லாத காரணத்தினால் தலித்துகளின் போராட்டம் தனித்தே நடைபெறுகிறது. எனவே, கல்வியிலிருந்து தலித்துகள் சமூக விலக்கம் செய்யப்படுவது குறித்து விவாதிப்பது அவசியம். தமிழ்நாடு அரசு ஆவண காப்பகம், கள ஆய்வில் பெறப்பட்ட தரவுகள், என்னுடைய சுய அனுபவம் இவையே கட்டுரையில் ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கல்வி: பொருளாதார முன்னேற்றத்தின் ஆயுதம்

காலனிய ஆட்சியாளர்களால் இந்தியாவில் நிறுவப்பட்ட மேற்கத்திய கல்வி முறை இந்து சமூக அமைப்பின் ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான ஆயுதமாக இன்றும் இருந்து வருகிறது. கல்வி கற்றல் என்பது முதலில் கற்பவர்களை பண்டைய சாதி சார்ந்த குலத்தொழிலிலிருந்து விடுவிக்கிறது. பண்பாட்டு தளத்தில் அவர்களிடத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிற அதேசமயம் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவுகிறது. அது மட்டுமின்றி கல்வி கற்ற முன்னேறிய பிரிவினரே தலித் விடுதலையில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தலித் இயக்கத் தலைவர்கள் தலித் மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் தலித்துகள் கல்வி கற்பதற்கு அரசாங்கத்தின் உதவியை நாடினர். தலித்துகளுக்கு கல்வி கொடுப்பதே அவர்களை முன்னேற்றுவதற்கான முறை என்றே காலனிய ஆட்சியினர் உணர்ந்திருந்தனர், அவர்களுக்கு கல்வி கொடுப்பதில் ஆர்வம் காட்டினர்.

தியாசபிகல் சொசைட்டி, டிப்ரஸ்டு கிளாஸ் மிஷன், பிரம்ம சாமாஜ், சோசியல் சர்வீஸ் லீக் மற்றும் கிறிஸ்துவ மிஷனரி இயக்கங்கள் தலித்துகளுக்கு தனிப் பள்ளிகள் மூலம் கல்வி கொடுத்திருப்பதனை அறியமுடிகிறது. தலித்துகளும் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியிருப்பதனை சில புள்ளி விவரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடைசி கால் நூற்றாண்டில் சென்னை மாகாணத்தில் பொதுக் கல்வி நிலையங்களில் தலித் மாணவர்களின் எண்ணிக்கை 30,000-இருந்து 1,50,000-ஆக உயர்ந்திருக்கிறது. 1892ம் ஆண்டு தலித் மாணவிகளுக்கென இருந்த 11 பள்ளிகளின் எண்ணிக்கை பின்னர் 100-ஆக உயர்ந்திருப்பதே தலித்துகள் கல்வி கற்பதில் காட்டிய ஆர்வத்தை அறிந்து கொள்ள முடியும்.

தலித்துகள் அன்று கல்வி கற்பதற்கு மூன்று வழிமுறைகள் இருந்தது: 1. அரசாங்கப் பள்ளி, 2. கிறிஸ்துவ மிஷினரி பள்ளி மற்றும் 3. சொந்தமாக பள்ளிக்கூடம் நிறுவுதல். கிறிஸ்துவ மிஷினரிகள் தலித்துகளுக்கென தனிப் பள்ளிக்கூடங்களை நடத்தியிருக்கின்றனர். சில சமயங்களில் கிறிஸ்துவ மிஷினரிகள் நடத்திய கல்வி நிலையிங்களில் தலித்துகள் சேர்வது கடினமாக இருந்திருக்கிறது. திருநெல்வேலியிலிருக்கும் ஜான்ஸ் கல்லூரியில் அது தொடங்கப்பட்ட ஆரம்ப காலங்களில் பள்ளர் மற்றும் பறையர் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து பயில்வதை நாடார் சாதியினர் எதிர்த்திருப்பதே இதற்கான உதாரணம். தலித்துகள் சொந்தமாக பள்ளிக்கூடம் நிறுவியிருப்பினும் இது அரிதாக நடைபெற்றிருக்கிறது. தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்களை விடுவிப்பதற்கென கிறிஸ்துவ மிஷினரிகள் நிறுவிய கல்வி நிறுவனங்களிலேயே இதுதான் நிலையென்றால் அரசாங்கம் நடத்திய ''பொது''க் கல்வி நிலைலயங்களில் முன்னதைவிடவும் கூடுதலான ஒடுக்குமுறையை சந்தித்தனர் தலித்துகள்.

கல்வி நிலையம் நிறுவுதல், அடிப்படைக் கட்டமைப்பினை உருவாக்குதல், ஆசிரியர் மற்றும் இதர ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல் இவை அரசாங்கத்தின் ''பொது''ப் பணம் மூலம் நிர்வகிக்கப்படுவதையே ''பொது''க் கல்வி நிலையம் என்று பொருள்படும். பொதுக் கல்வி நிலையத்தில் தலித் மாணவர்கள் சேர்ந்து பயில்வதிலிருந்து அவர்கள் விலக்கப்பட்டனர். தலித்துகளுக்கு புழங்கு உரிமையற்ற பகுதியில் பள்ளியை நிறுவுதல், நேரடியாக அனுமதி மறுத்தல், தலித் மாணவர்களுக்கு அனுமதி வழங்கும் பள்ளியை தலித்தல்லாதோர் புறக்கணித்தல், பள்ளிக்குள்ளேயே தலித் மாணவர்களுக்கென தனி வகுப்பறை உருவாக்குதல், அனைத்து சாதி மாணவர்கள் இருக்கும் ஒரே வகுப்பறைக்குள் தலித் மாணவர்களுக்கென தனி இருக்கையை ஒதுக்குதல் போன்ற வடிவங்களில் தலித் மாணவர்கள் சமூக விலக்கம் செய்யப்பட்டனர். இனி, இது குறித்து விரிவாகக் காண்போம்.

புழங்கு உரிமையற்ற வெளி

குடியிருப்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப அன்றி சாதி வாரியாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்து சமூக அமைப்பில் பிராமணர் மற்றும் இதர சாதி இந்துக்களின் வசிப்பிடத்தில் தலித்துகளுக்கான புழங்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது. பிராமணர் மற்றும் இதர சாதி இந்துக்களின் வசிப்பிடத்தின் அருகாமையிலேயே தபால் அலுவலகம், நீதி மன்றம், கல்வி நிலையம் போன்ற நவீன நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் அந்த நிறுவனங்களை அணுகுவதிலிருந்து தலித்துகள் விலக்கப்பட்டிருந்தனர். மெட்ராஸ் தொடக்கக் கல்விச் சட்டம் 1920 பிரிவு 40 (2) விதி 8, பள்ளிகள் அனைத்து சாதி மற்றும் சமூகத்தினர் புழங்குவதற்கு ஏற்ற இடத்திலியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கிறது. இருந்த போதிலும், பொதுக் கல்வி நிலையங்கள் தலித்துகளுக்கு புழங்கு உரிமையற்ற பகுதியிலேயே அமைக்கப்பட்டிருந்த காரணத்தினால் தலித் மாணவர்கள் கல்வி நிலையங்களை அணுகுவதிலிருந்தும் கல்வி கற்பதிலிருந்தும் விலக்கப்பட்டிருந்தனர்.

1928-29ஆம் ஆண்டு எடுத்த புள்ளி விவரத்தின்படி 1, 875 ''பொது''ப் பள்ளிகள் தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்படும் புவிப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் பத்தாண்டுகளுக்கு மேலான பின்னர், அதாவது 1935-36ம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி 891 பள்ளிகளும், 1935-36ம் ஆண்டு புள்ளி விவரப்படி 440 பள்ளிகளும் தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்படும் புவிப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்தன. இந்த புள்ளி விவரங்களிலிருந்து தலித்துகள் எந்த அளவிற்கு கல்வி கற்பதிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள இயலும். இதனால் தலித்துகள் கல்வி நிலையங்களை அணுகுவதற்காக முதலில் புழங்கு உரிமைக்கான போராட்டத்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. இதற்கான உதாரணமாக கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் பொதுப் பள்ளியை அணுகுவதற்கு தலித்துகள் அக்ரஹாரத்தை புழங்குவதற்கான போராட்டத்தை நடத்தியதைக் கூறலாம். இதில் தலித் மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் அக்ரஹாரம் வழியாக அழைத்துச் சென்ற பொழுது பிராமணர் மற்றும் இதர சாதி இந்துக்கள் தலித்துகள் மீது வன்முறையை ஏவினர்.

அனுமதி மறுப்பு

கல்வி கற்கும் செயல்பாட்டிலிருந்து தலித் மாணவர்களை விலக்குவதற்கு சாதி இந்துக்கள் கடைபிடித்து வந்திருக்கின்ற ஒரு வடிவம் பொதுக் கல்வி நிலையங்களில் தலித் மாணவர்களின் சேர்க்கையை வெளிப்படையாக மறுத்தல் ஆகும். தலித் மாணவர்கள் பொதுப் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பிக்கிற பொழுது அவர்களை சேர்த்துக் கொள்ள முடியாது என்று அவர்களுக்கு பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்பட்டிருக்கிற சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதனைக் காணமுடிகிறது. உதாரணமாக, சேலம் வட்டாட்சி வாரியத்தால் ராக்கிபட்டி மற்றும் எட்டிமாணிக்கம்பட்டி, சங்ககிரி வட்டாட்சியில் இருந்த வட்டாட்சி வாரியப் பள்ளி போன்ற பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்கு அரிதாக சென்ற தலித் சாதியைச் சேர்ந்த ஒரு சிலருக்கு கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, வெள்ளிங்கிரி என்ற தலித் ஒருவர் கோயம்புத்தூர் அரசு கல்லூரிக்கு விண்ணப்பித்த பொழுது அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. அனுமதி மறுத்தல் என்பது ஒரு பொதுவான செயலாக நடைபெற்றிருக்கிறது, இதனால் அனுமதி மறுக்கப்படும் இடங்களில் சேர்க்கைக்கான போராட்டத்தை தலித்துகள் நடத்தியிருப்பதனைக் காணமுடிகிறது. வெள்ளிங்கிரிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கல்லூரி முதல்வர் மற்றும் உயர் கல்வி அதிகாரிகளுக்கு முறையிடல் என பல போராட்டங்களுக்குப் பின்னரே அவருக்கு அக்கல்லூரியில் இடம் வழங்கப்பட்டிருக்கிறது.

அனுமதி, புறக்கணிப்பு, தீண்டாமை

தலித்துகளின் போராட்டங்களுக்குப் பின்னர் தலித் மாணவர்கள் பொதுப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவ்வாறு அனுமதிக்கிற பொழுது அங்கு ஏற்கனவே படித்துவரும் சாதி இந்து மாணவர்கள் அப்பள்ளிகளை புறக்கணித்திருக்கின்றனர். இதற்கான சில உதாரணங்களைக் காண்போம். திருவண்ணாமலை கீழத்தூர் நகராட்சி தொடக்க பகல் பள்ளியில் சேர்வதற்கு சுமார் 50 தலித் மாணவர்கள் வருவதை அறிந்த தலித்தல்லாத மாணவர்கள் அப்பள்ளியை புறக்கணித்தனர். சிதம்பரம் அருகே ÿமுஷ்னம் மேல்நிலை தொடக்கப் பள்ளியில் தலித் மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட காரணத்தினால் அப்பள்ளியில் 20 ஏப்ரல் 1933ல் 183-ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை 24 ஏப்ரல் 1933 அன்று 21 பேராகக் குறைந்து விட்டது. இந்த எண்ணிக்கை பின்னரே கூடியிருக்கிறது. தலித்துகள் அனுமதிக்கப்படும் பள்ளிகளில் நாங்கள் பயில மாட்டோம் என்ற சாதி இந்துக்களின் நிலைப்பாட்டிற்குள் தலித்துகளை விலக்கம் செய்கின்ற நடவடிக்கை இருப்பதனையே காணமுடிகிறது.

சில பள்ளிகளில் தலித்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பினும் அவர்கள் பாகுபாடுதன் நடத்தப்பட்டிருக்கின்றனர். அதாவது, ஒரே பள்ளிக்குள் தலித்துகளுக்கென ''தனி'' வகுப்பறைகள், ''தனி'' இருக்கைகள் என்று ''பொது'' மாணவர்களிடத்திலிருந்து தலித் மாணவர்கள் விலக்கப்பட்டிருக்கின்றனர். சிதம்பரே அருகே உள்ள ÿமுஷ்னம் மேல்நிலை தொடக்கப் பள்ளியில் தலித் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பள்ளிக் கட்டிடத்திற்குப் பின் பகுதியில் தலித் மாணவர்களுக்கென தனியான கூடாரம் அமைத்து வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனை பள்ளி ஆய்வு அதிகாரிகள் கண்டித்த பின்னர் தனிக் கூடார முறை கைவிடப்பட்டிருக்கிறது. இரண்டாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர்களை அதே நிலை படிக்கின்ற தலித்தல்லாத மாணவர்களோடு உட்கார வைப்பதற்குப் பதிலாக முதலாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர்களோடு உட்கார வைக்கின்ற நடைமுறையும் இருந்திருக்கிறது. மற்ற மாணவர்களிடமிருந்து விலக்கம் செய்து தலித் மாணவர்களை ''தனி''யாக உட்கார வைக்கின்ற வழமைக்கு தீண்டாமையே காரணமாக இருந்திருக்கிறது.

தனிப் பள்ளி முறைக்கு வித்திட்ட சமூக விலக்கம்

மேற்கத்திய கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலந்தொட்டு தலித்துகளை கல்வி கற்பதிலிருந்து விலக்கி வைக்கின்ற செயல் மேற்குறிப்பிட்ட வடிவங்களில் நடைபெற்றிருப்பதனை விவரித்திருக்கிறோம். இந்த சமூக விலக்கலுக்கு எதிரான நடவடிக்கையை காலனிய அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது மேலும், தலித்துகளுக்கு சாதகமான நிலைப்பாட்டினை கோட்பாட்டளவில் எடுத்திருக்கிறது. சாதி அல்லது மதம் அடிப்படையில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு மறுக்கின்ற பள்ளியின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படும் என்று மெட்ராஸ் ஆரம்பக் கல்வி சட்டம் 1920 அறிவித்திருக்கிறது. பொதுப் பள்ளியில் தலித் மாணவர்கள் இலவசமாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற கொள்கையை கடைபிடித்தது. உள்ளாட்சி நிறுவனங்கள் நடத்துகின்ற பள்ளிகள் அல்லது அரசு மாணியம் பெறும் கல்வி நிறுவனங்கள் அரசின் கல்விக் கொள்கையை பின்பற்ற மறுத்தால் அப்பள்ளிகளுக்கு அரசாங்கம் வழங்குகின்ற மாணியம் குறைக்கப்படும் அல்லது மாணியத் தொகை ரத்து செய்யப்படும் என்று நிலைப்பாட்டினையும் அரசாங்கம் எடுத்திருந்தது. மேலும் தலித்துகளை முன்னேற்றுவதற்கென தொழிலாளர் ஆணையர் 1920களில் நியமிக்கப்பட்டிருந்தார்.

தலித்துகளை முன்னேற்றுவதற்கு செய்யப்படுகின்ற பல்வேறு பணிகளில் அவர்களுக்கு கல்வி கொடுக்கின்ற பொறுப்பும் தொழிலாளர் ஆணையருடையதே. தனிப் பள்ளி நடத்துதல், கல்விக்கான நிதி உதவு வழங்குதல், விடுதியை பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்வதும் ஆணையருடையதே. கொள்கை அளவில் தலித்துகளுக்கு ஆதரவான நிலைப்படாட்டினை எடுத்திருந்த போதிலும் நடைமுறையில் காலனிய அரசாங்கம் அதனுடைய கொள்கையினை நடைமுறைப்படுத்தியிருக்கவில்லை. தலித்துகளை கல்வி நிலையங்களில் அனுமதிக்க மறுத்தல், அனுமதித்திருந்தால் பாகுபாட்டுடன் நடத்துதல், அனுமதி மறுப்பு மற்றும் பாகுபாட்டுடன் நடத்துதல் ஆகியவற்றை எதிர்க்கும் கொள்கைகளை நடைமுறைப் படுத்தியிருக்கவில்லை காலனிய அரசாங்கம். விளைவு, தலித்துகள் தங்களுக்கனெ தனியான கல்வி நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கத் தூண்டியிருக்கிறது. சென்னை மாகாண அவையில் தலித்துகளுக்காக நியமிக்கப்பட்ட தலித் பிரதிநிதியான ஏ.எஸ். சகஜானந்தாவின் உரையிலிருந்து தலித் மாணவர்களுக்கான தனி கல்வி நிலையங்களின் கோரிக்கையும் அதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

அவர் இவ்வாறு உரையாற்றியிருக்கிறார்: ''ஒவ்வொரு தாலுக்காகளிலும் ஒவ்வொரு சக்கண்டரி பாடசாலையை ஏற்படுத்த வேண்டும். அதில் படிப்பவர்கட்கு இலவசமாகவே உணவு முதலியன கொடுக்க வேண்டும். இது மிகவும் அவசியம். ஒவ்வொரு ஜில்லாவிலும் அவசியமாக ஆதித் திராவிடர்களுக்கு ஐஸ் கூல்களேற்படல் வேண்டும். தென்னார்காடு ஜில்லாவில் ஆறு லட்சம் ஆதித் திராவிடர்களிருக்கிறார்கள். ஆறு லட்சம் ஜனங்களிலும் ஸ்கூல் பைனல் படித்தவர் ஒருவருமில்லர். இதைவிட எங்கள் துர்ப்பாக்கியத்தைச் சொல்லிக் காட்ட வேண்டாம். இவ்விஷயமாக அரசாங்கத்தாரைக் கேட்டால் எல்லாக் கல்லூரிகளிலும் ஆதித்திராவிட மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. உங்களுக்கெனத் தனிக் கல்லூரிகள் வேண்டாமெனக் கூற முயல்கின்றார்கள். அதற்காக நாங்கள் நன்றி பாராட்டுகிறோம். அந்தச் சட்டத்தைச் செய்கையில் காண்பது அரிதாகவிருக்கிறது. நாங்களே வைதீகம் பாராட்டுமிடங்களிலுள்ள கல்வி சாலைகளுக்குச் சென்று எங்கள் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டால் சட்டத்திற்குப் பயந்து சேர்த்துக் கொள்வார்கள் அல்லது சாக்குபோக்கு சொல்வார்கள். அது விஷயத்தில் அழுத்தமாக நடவடிக்கை எடுத்துக் கொண்டால் பகைமையும் மாணவன் முன்னுக்கு வர முடியாத கஷ்டங்களும் ஏற்படுகின்றன. பலவித சிக்கல்களிருக்கின்றன.

உயர்ந்த வகுப்பினராகிய வலிவுள்ளவர்களிடத்தில் நாங்கள் சென்று சண்டையிட்டுக் கொண்டு உள்ளதையுங் கெடுத்துக் கொள்வதைவிட தனியே விரும்புவது நலமாகும். ஆதித் திராவிட மாணவர்களைச் சேர்ப்பதால் கஷ்டமுண்டாகுமென்று தோன்றும் இடங்களிலெல்லாம் ஆதித்திராவிடர்கட்குத் தனிப்பாடசாலைகள் அமைத்துக் கொடுத்தால் அது எங்கள் சமூகத்திற்குப் பெரிதும் பயன்படும். எங்கள் சமூகத்திற்கென ஏற்படும் கல்லூரிகளில் கூடுமானால் மற்றைய வகுப்புப் பிள்ளைகளும் சேர்ந்து படிக்கச் சொற்ப உதவி புரிந்தால் உயர் வகுப்பு மாணவர்களும் வந்து சேர்வார்கள். அதன் மூலம் சுலபமாக சமரசம் ஏற்படக்கூடும். தற்போது மகமதிய மாணவர்கட்கு தனிக் கல்லூரிகள் ஏற்படுத்தி நடத்தி வருவதைப் போல் எங்களுக்கும் நடத்திவரக் கேட்டுக்கொள்கிறேன்''. சட்ட ரீதியான அங்கீகாரம் இருந்த போதிலும் தலித் மாணவர்கள் பொதுப் பள்ளியில் பயில்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்பது சகஜானந்தாவின் உரையிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. இதுவே தலித்துகளை தங்களுக்கென தனிக் கல்வி நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கத் தூண்டியிருக்கிறது.

பொதுப் பள்ளியில் தலித்துகள் அனுமதிக்கப்படவில்லை என்றால் அரசாங்கமே தலித்துகளுக்கென தனிப் பள்ளிகளை உருவாக்கியிருக்கிறது. திருவண்ணாமலை நகராட்சிப் பள்ளியில் தலித் மாணவர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தினால் திருவண்ணாமலை நகராட்சி அவையே தலித் மாணவர்களுக்கென தனிப் பள்ளிக்கூடத்தை நிறுவியிருப்பதை இதற்கான உதாரணமாகக் கூறலாம். தலித்துகளும் அவர்களின் சுயமுயற்சியினால் தனிப் பள்ளிக்கூடங்கள் நிறுவியிருக்கின்றனர். விருத்தாச்சலம் வட்டாட்சியைச் சேர்ந்த சத்தியவாடி கிராமம் , திருநெல்வேலி மாவட்டம் திருப்பனிகரிசல்குளம் போன்ற பகுதிகளில் தலித்துகள் நிறுவிய பள்ளிகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எனவே, ''பொது''ப் பள்ளிக்கூடங்களில் தலித்துகளுக்கு சேர்க்கை அனுமதி மறுக்கப்படுவதால் தலித்துகளுக்கென ''தனி''ப்பள்ளிக்கூடம் உருவாகியிருக்கிறது என்பது தெளிவு.

''தனி''ப் பள்ளிக்கூடம் என்ற கோரிக்கையினை அனைத்துத் தலித்துகளும் முன்வைத்திருக்கவில்லை. ''பொது''ப் பள்ளிக்கூடங்களில் தலித்துகள் அனுமதிக்கப்பட வேண்டும், தனிப் பள்ளிக் கூடங்கள் வேண்டாம் என்று போராடிய தலித்துகளும் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆர். வீரையன். இவர் தலித்துகளுக்கென தனிப் பள்ளிக்கூடம் தொடங்குவதனை தொடர்ச்சியா எதிர்த்திருக்கிறார். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பேசப்படுகிற இந்த ஜனநாயகச் சூழலில் ஆதி-திராவிடர்களுக்கென தனிப் பள்ளிக்கூடம் என்ற கொள்கையை அரசாங்கம் அனுமதிக்கிறதா? என்ற கேள்வியை சென்னை மாகாண அவையில் எழுப்பியுள்ளார் வீரையன். இக்கேள்விக்கு கல்வி அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்: ''தனிப் பள்ளிக்கூடம் சேரி மக்களின் கோரிக்கையினால் தொடங்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர் ஆணையரின் கட்டுப்பாட்டிற்குக் கீழ்வரும் பல சேரிகளில் தனிப் பள்ளிக் கூடங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தொடக்கக் கல்வி கொடுக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் அதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப் படுகிறது''.

வீரையன் மீண்டும் பின்வரும் கேள்வியை எழுப்பினார்: தனிப் பள்ளி என்பது எப்பொழுதும் ஆதி திராவிடர்களை தனியாக வைத்திருப்பதாக பொருள் கொள்கிறதா? ஆதி திராவிட மாணவர்கள் நகராட்சிப் பள்ளிகளில் அனுமதி கோரும் பொழுது மட்டும் தனிப் பள்ளி என்ற கருத்து நகராட்சி அவையிடமிருந்து தோன்றுகிறது? இதற்கு முன்னர் தோன்றுவதில்லையே ஏன்? இதற்கு கல்வி அமைச்சர் பின்வருமாறு பதிலளித்தார்: ''தனிப் பள்ளி இல்லாதிருப்பதே அரசாங்கத்தின் கொள்கை, ஆனால் அனைத்துப் பொதுப் பள்ளிகளும் அனைத்து மாணவர்களுக்கும் திறக்கப்பட வேண்டும். ஆனால் ஆதி திராவிடர்களிடமிருந்து தங்களுக்கென தனிப் பள்ளி வேண்டும் என்ற சிறப்பு கோரிக்கையை முன்வைத்தால் நாங்கள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்''.

இதனால் வீரையன் பின்வரும் மற்றொரு கேள்வியை இவ்வாறு எழுப்பியுள்ளார்: 300 பேர் வசிக்கின்ற சேரியில் 10 பேர் தனிப் பள்ளி கேட்கிற பொழுது 290 பேரின் உணர்வுகளை புறக்கணிக்க முடியும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? நீங்கள் யாருடையை உணர்விற்கு மதிப்பு கொடுக்க இருக்கிறீர்கள்? 290 பேரின் கோரிக்கையையா? அல்லது 10 பேரின் கோரிக்கையையா? வீரையனின் கேள்விகளிலிருந்து அவர் ''தனி''ப் பள்ளி முறையை கடுமையாக எதிர்த்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. தலித்துகள் முன்வைத்த கோரிக்கையில் தலித் மாணவர்கள் பொதுப் பள்ளிக் கூடங்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை விடவும் தனிப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அரசாங்கம் கொள்கை அளவில் தனிப் பள்ளி முறையை விரும்பியிருக்கவில்லை எனினும் நடைமுறையில் அது தனிப் பள்ளி முறையையே ஏற்படுத்தியிருக்கிறது. ''தனி''ப் பள்ளி முறை ''பொது''விலிருந்து தலித்துகளை விலக்குவதைத் தவிர வேறொன்றும் இல்லை.

கல்வியிலிருந்து விலக்கம்: இன்றைய நிலை

இன்றைய காலங்களில் தலித்துகள் கல்வி பெற வேண்டும் என்பதற்காக நிதி உதவி வழங்குதல் உட்பட பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் நடைமுறையில் அவற்றை கல்வி நிலையத்தின் நிர்வாகம் முறையாக அமுல்படுத்துவதில்லை. இங்கு இருக்கின்ற திட்டங்கள் அமுல்படுத்தப்படுகிறதா? இல்லையா? என்ற ஆராய்ச்சிக்குள் செல்லவில்லை. எவ்வாறு தலித் மாணவர்கள் உயர் கல்வியில் அறிவியல் பாடப் பிரிவில் படிப்பதிலிருந்து விலக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதை விவாதிப்போம். காரணம் அறிவியல் கல்வி பயில்வது என்பது அத்துறைகளில் படிப்பவர்களை வல்லுநர் தரத்திற்கு உயர்த்துகிறது மேலும் வேலை வாய்ப்பும் எளிதில் கிடைத்துவிடுகிறது. அம்பேத்கர் இதனை மிகத் தெளிவாக பின்வருமாறு கூறியுள்ளார்: ''பொருளாதார நிலையை உயர்த்தும் விஷயத்திலிருந்து நோக்கும்போது, தாழ்த்தப்பட்ட சாதியினருக்குப் பொதுக் கல்வியைவிட தொழில்நுட்பக் கல்வி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெளிவு''.

இந்தியாவில் சில அரசாங்கங்கள் வரலாறு, பொருளாதாரம் போன்ற படிப்புகள் பயனற்றவை என்று அறிவித்ததிலிருந்தும், அத்துறையில் பட்டம் பயின்றவர்கள் வேலை வாய்ப்பினைப் பெறுவது மிகக் கடினமான செயலாக இருந்துவரும் இன்றைய சூழலில் சமூக அறிவியல் பட்டம் என்பது தலித்துகளை பொருளாதாரத்தில் முன்னேற்றுவதற்கு உதவாது. ஆனால் இத்துறைகளை முற்றிலும் புறக்கணிப்பது என்பது தலித் விடுதலைக்கு ஊறு விளைவிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொருளாதார முன்னேற்றம் நோக்கில் என்ற தலித்துகள் அறிவியல் படிப்பதும், அவர்களின் சமூக விடுதலைக்கான நோக்கில் சமூக அறிவியல் துறையில் கவனம் செலுத்துவதும் தவிர்க்க இயலாத தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அம்பேத்கர் அறிவியல் தொழில் நுட்பத்தினை பயில்வதற்கு தலித் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். ஆனால் அத்துறையில் தலித் மாணவர்கள் சேர்வதே இன்று சிக்கலாக இருந்து வருகிறது. எனவே, பதினொராறாம் வகுப்பு, இளநிலை, முதுநிலை இளம் முனைவர், முனைவர், முதுமுனைவர் ஆகிய நிலைகளில் தலித் மாணவர்கள் எவ்வாறு அறிவியல் பாடப் பிரிவிலிருந்து விலக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதைக் காண்போம். இது குறித்து விவாதிப்பதற்கு முன்னர் பள்ளி நிலையில் தலித் மாணவர்களின் சேர்க்கை எந்த பள்ளிகளில் இருக்கிறது, அங்கு இருக்கும் பாகுபாடு என்ன என்பதைக் காண்போம்.

கிராமப் புறங்களில் இருக்கின்ற தலித்துகள் அவர்கள் வசிக்கின்ற கிராமத்தில் அல்லது பக்கத்து கிராமத்தில் இருக்கின்ற பள்ளியில் படிக்கச் செல்கின்றனர். ஒரு கிராமத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி இவைகள் இருந்தால் தலித் குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளியில் இணைந்து படிக்கின்றனர். சில கிராமங்களில் தலித்துகளுக்கென இருக்கின்ற ஹரிஜன் தொடக்கப் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தலித் குழந்தைகள் படிக்கின்றனர். அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் கூடுதலான கட்டமைப்பு வசதிகள் இருந்த போதிலும் அப்பள்ளிகளில் படிக்க இயலாத சூழலே நிலவுகிறது. திருநெல்வேலி மாவட்டம் செந்தட்டியாபுரம், பந்தப்புளி, ரெட்டியபட்டி மற்றும் பூவன்குறிச்சி ஆகிய கிராமங்களில் கள ஆய்வு நடத்திய போது தலித் குழந்தைகள் படிக்கின்ற அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதின்மையைக் காணமுடிந்தது.

குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதற்கென தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் குறுந்தகடு இயக்குவதற்கான பெட்டி வழங்கப்பட்டிருக்கிறது, ஆனால் அப்பள்ளிகளில் மின்சாரம் இல்லாததால் இப்பொருட்கள் பயன்படுத்த இயலாத நிலையில் இருப்பதனை ரெட்டியப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் காணமுடிந்தது. பூவன்குறிச்சி ஹரிஜன் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களின் எண்ணிக்கை மூன்றாக இருந்தது இரண்டாக குறைக்கப்பட்டுவிட்டது. மேலும், குழந்தைகள் அமர்ந்து படிப்பதற்கென இருக்கைகள் இல்லை, ஒவ்வொரு வகுப்பிற்கென தனித்தனியான வகுப்பறைகள் இல்லை என்பது உட்பட பல அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதிருப்பதைக் கூறலாம். கற்பதற்குத் தேவையான வசதியின்மை தலித் குழந்தைகளின் கற்றலின் தரத்தில் பாதகமான விளைவினையே ஏற்படுத்தும். இதன் பொருள் என்னவென்றால் தலித் குழந்தைகள் தரமான கல்வி கற்பதிலிருந்து விலக்கப்படுவது என்பது தொடக்கக் கல்வி நிலையிலேயே தொடங்கிவிடுகிறது.

தொடக்கக் கல்வி நிலைக்கு முந்தைய நிலையான பாலர் பள்ளியில் தலித்தல்லாத குழந்தைகளிடமிருந்து தலித் குழந்தைகளைப் பிரித்து வைக்கின்ற பாகுபாட்டு நடைமுறையையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுக் கூறவேண்டும். பாலர் பள்ளியில் குழந்தைகள் அ மற்றும் ஆ என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தலித்தல்லாத குழந்தைகள் அதிகம் இருக்கின்ற பிரிவில் சொற்ப எண்ணிக்கையிலான தலித் குழந்தைகளும், தலித் குழந்தைகள் அதிகம் இருக்கின்ற பிரிவில் சொற்ப அளவிலான தலித்தல்லாத குழந்தைகளும் என பிரிக்கப்பட்டிருக்கின்றனர். இதனை ரெட்டியப்பட்டி மற்றும் பந்தப்புளி ஆகிய ஊர்களில் கள ஆய்வின் போது காணமுடிந்தது. இவ்வாறு பிரித்தல் என்பது மிகச் சமீபத்தில் நடப்பதாக அங்கு பணிபுரியும் பணியாளர்கள் கூறினர். இந்த பிரிவு காலனிய ஆட்சிக் காலத்தில் பள்ளிகளில் தலித் மாணவர்கள் தலித்தல்லாத மாணவர்களிடத்தில் இருந்து தனியாக பிரித்து வைக்கப்பட்ட சம்பவங்களிலிருந்து வேறுபட்டிருக்கவில்லை. சமூக விலக்கம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றை அனுபவித்தல் என்பது தலித் குழந்தைகளுக்கு பாலர் பள்ளியிலிருந்தே தொடங்கிவிடுகிறது. இந்தப் பின்னணியில் பயின்று வரும் தலித் குழந்தைகளே பின்னர் நகரங்களுக்கு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். இவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பின்னர் சந்திக்கின்ற சிக்கலைக் காண்போம்.

மாணவர்களின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய புள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அவர்கள் பெறுகின்ற மதிப்பெண். பின்னர் அடுத்த திருப்பத்தினை ஏற்படுத்தும் புள்ளி பதினொறாம் வகுப்பில் அவர்கள் சேர்கின்ற பாடப் பிரிவு. தலித் மாணவர்கள் பொதுவாக கணிதம், கணினி, அறிவியல் அல்லாத பாடப் பிரிவுகளான வரலாறு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் பயில்கின்றனர். தலித் மாணவர்களுக்கு வரலாறு மற்றும் விவசாயம் ஆகியவற்றின் மீது மட்டுமே ஆர்வம் இருந்து வருகிறதா? அல்லது கணிதம், கணினி, அறிவியல் ஆகிய தங்களால் படிக்க இயலாது என்ற அச்சமா? ஆர்வமும் அச்சமும் தலித் மாணவர்களிடத்தில் அக உணர்வினால் சுயமாக ஏற்படுவதில்லை அது புற உலகினால் திணிக்கப்படுகிறது. தலித் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் வரலாறு மற்றும் விவசாயம் ஆகிய பிரிவுகளிலும் சொற்ப அளவில் கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளிலும் சேர்த்துக் கொள்கிறது பள்ளி நிர்வாகம். இது எவ்வாறு நிகழ்கிறது என்றால் பள்ளியில் விண்ணப்பிக்க வரும் தலித் மாணவர்களிடத்தில் நீ பெற்றிருக்கும் மதிப்பெண்ணுக்கு கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் இடம் கிடைப்பது அரிது, வரலாறு மற்றும் விவசாயம் ஆகிய பிரிவுகளில் இடம் கிடைக்கும் அதற்கு விண்ணப்பிக்கவும் என்று கூறிவிடுவர் பள்ளி நிர்வாகத்தினார்.

சொற்ப அளவிலான மாணவர்களை கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு அனுமதிப்பர். மேலும், தலித் மாணவர்களிடத்தில் உன்னால் கணிதம் அறிவியல் போன்ற பாடங்களை படிக்க இயலாது, அவை மிகக் கடினமானவை. வரலாறு எளிதானது எனவே அதைப் படி என்று அறிவுரை கூறுவர். இவை அனைத்து தலித் மாணவர்களையும் ஒருங்கிணைத்துக் கூறுவதில்லை, தனித் தனியாகவே கூறுவர். மாணவர்கள் விண்ணப்பிக்கிற பொழுது தனித் தனியாக வருவதும் பள்ளி நிர்வாகத்திற்கு வசதியாக அமைந்து விடுகிறது. கணிதப் பிரிவில் சேர்த்து என்னை டாக்டராக்க வேண்டும் என்பது என்னுடையை தந்தையின் ஆசை. அதற்கு தூய அறிவியல் படித்தால் மருத்துவராகலாம் என்று என்னை அறிவியல் பிரிவிற்கு விண்ணப்பிக்க வைத்தது நாசரேத் மர்காஷியஸ் மேனிநிலைப் பள்ளி நிர்வாகம். தூய அறிவியல் படித்தால் மருத்துவப் படிப்பில் சேர்வது ‘கனவாகவே’ இருக்கும் என்பது அங்கு சென்ற பின்னரே தெரிய வந்தது. நான் அனுபவித்த அதே நிலை இன்றும் நீடிப்பதை அறியமுடிகிறது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட பல்வேறு மதச் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளிலும் தலித்துகள் கணிதம், அறிவியல் போன்ற பாடப் பிரிவுகளிலிருந்து திட்டமிட்டே விலக்கப்படுவது இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு கணினிப் பிரிவிற்கு விண்ணப்பிக்கச் சென்ற தலித் மாணவர் ஒருவரிடம் உன்னுடைய மதிப்பெண் அப்பிரிவிற்கு தகுதியற்றது என்றும், கணிதம் மிகக் கடுமையானது அது உன்னால் படிக்க முடியாது என்றும் கூறி அத்தலித் மாணவருக்கு கணினிப் பிரிவில் இடம் தர மறுத்திருக்கிறது திருநெல்வேலியில் உள்ள ஒரு கிறிஸ்துவப் பள்ளி. எனவே, தலித் மாணவர்களின் ஆர்வமும் அச்சமும் பள்ளி நிர்வாகம் என்ற புற உலகு ஏற்படுத்துவதே என்பது தெளிவு. இதனால் சொற்ப எண்ணிக்கையிலான தலித் மாணவர்களே கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பாடப் பிரிவில் தேர்ச்சி பெறுகின்றனர்.

பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் பட்டப் படிப்பு செல்வது என்பது வாழ்க்கையின் அடுத்தக் கட்ட திருப்பத்தின் புள்ளி. பள்ளி நிலையில் கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் சிலருக்கு மருத்துவம், பொறியியல் போன்ற துறையில் இடம் கிடைக்கிறது. அதில் கிடைக்காதவர்கள் இளநிலையில் அறிவியல் பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கின்றனர். அங்கும் அவர்கள் விரும்பும் பாடம் கிடைப்பதில்லை. என்னை மருத்துவராக்கும் என் தந்தையின் கனவு தகர்க்கப்பட்ட போதிலும் விலங்கியில் துறையில் டாக்டர் பட்டம் பெற்றுவிட வேண்டும் எனக்குள் ஆசை இருந்தது. தூய அறிவியல் பாடப் பிரிவில் விலங்கியலை மிக ஆர்வமாக படித்து வந்த நான் பள்ளி அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தேன். நாசரேத் மர்காஷியஸ் கல்லூரியில் விலங்கியல் பிரிவில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சென்றேன். கல்லூரி முதல்வர் உன்னுடைய மதிப்பெண்ணுக்கு வரலாறு, பொருளாதாரம் போன்ற பாடப் பிரிவுகளில் இடம் கிடைக்கும், இதில் சேர்வதற்கு தாமதப்படுத்தினால் அதுவும் கிடைக்காது என்று பயமுறுத்தினார். வேறு வழியின்றி நான் வரலாற்று துறையில் சேர்ந்தேன். விலங்கியல் பாடத்தில் டாக்டர் பட்டம் பெற்றுவிட வேண்டும் எனது ஆசையும் தகர்க்கப்பட்டது.

என்னுடன் தூய அறிவியல் வகுப்பில் படித்து என்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த தலித்தல்லாத மாணவருக்கு விலங்கியல் பாடப்பிரிவில் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. என்னைவிடக் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த மாணவனுக்கு விலங்கியல் பிரிவில் இடம் வழங்கப்பட்டிருக்கிறது அதிக மதிப்பெண் பெற்றிருந்த எனக்கு மறுக்கப்பட்டிருக்கிறது ஏன் என்று எனக்குள் இருந்து கொண்டிருந்த கேள்விக்கு கிடைத்த விடை அவர் கிறிஸ்துவ நாடார், சமூகத்தில் உயர்ந்தவர்! நான் தலித், தாழ்த்தப்பட்டவன்!. சாதிய அரசியல் பெரிய அளவிற்கு புரியாதிருந்த எனக்கு அக்கல்லூரியில் தலித் மாணவர்களுக்கு அறிவியல் பாடப்பிரிவுகளில் இடம் வழங்கப்படமாட்டாது என்பது பின்னர்தான் தெரிய வந்தது. மற்றொரு உதாரணத்தையும் இங்கு காண்போம். வணிகவியல் படித்தால் வங்கி வேலைக்குச் செல்வது எளிது என்று நம்பிக்கை இன்றும் இருந்து வருகிறது. பல கல்லூரிகளில் வணிகவியல் மாணவர்கள் தங்களை பிரிவினை ராயல் டிப்பார்ட்மெண்ட் என்ற அழைத்துக் கொள்வார்கள். இன்றும் ஒரு முக்கியத்துவம் இருக்கின்ற வணிகவியல் பிரிவில் சேர்ப்பதில் இருந்தும் தலித் மாணவர்கள் விலக்கப்படுகிறார்கள். ஓரிரு வருடங்களுக்கு முன்னர் (2003) மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியில் வணிகவியில் துறையில் சேர்வதற்கு பன்னிரெண்டாம் வகுப்பில் 890 மதிப்பெண் பெற்றிருந்த தலித் மலையாளி மாணவர் விண்ணப்பித்த பொழுது அவருக்கு இடம் மறுக்கப்பட்டது, அவரைவிட குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த கிறிஸ்துவ நாடார் மாணவருக்கு அதே துறையில் இடம் வழங்கப்பட்டது.

தலித் மலையாளி மாணவருக்கு வணிகத்துறை மறுக்கப்பட்டது மட்டுமல்ல மாறாக அவருக்கு தமிழ் துறையில் இடம் கொடுத்ததும் ஒருவகையான ஒடுக்குமுறைதான். தலித் மலையாளி மாணவரால் எவ்வாறு தமிழ் மொழியில் இளங்கலைப் பட்டத்தைப் படிக்க இயலும்? தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கென இருக்கின்ற ஒரே அரசுக் கல்லூரி திருநெல்வேலியிருக்கும் ராணி அண்ணா கல்லூரியே, இதுவும் பெண்கள் கல்லூரியே. இதானல் தலித் மாணவர்கள் சிறுபான்மையினர் மற்றும் அரசு உதவி பெறுகின்ற கல்லூரியை மட்டுமே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. இக்கல்லூரிகளிலிருந்து தலித் மாணவர்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவியாயிருக்கும் கல்வியிலிருந்து விலக்கப்படுவதன் விளைவினால் தலித் மாணவர்கள் பெரும்பாலானோர் சமூக அறிவியல் துறைகளிலும் சொற்ப எண்ணிக்கையில் அறிவியல் துறைகளிலும் இளநிலை மற்றும் முதுநிலையில் பட்டம் பெறுகின்றனர். இத்தகைய கல்லூரிகள், தலித் மாணவர்களின் முன்னேற்றத்திற்கென பல திட்டங்கள் வகுத்து அதற்கென நிதியும் பல்கலைக் கழக மானியக் குழு வழங்கினாலும் கல்லூரி நிர்வாகம் தலித் மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு செலவிடாமல் போலி பற்றுச் சீட்டு வைத்துக் கொண்டு அப்பணத்தை தவறாக செலவு செய்யப்படுகிறது. மேலும் உயர் கல்வியில் தலித்துகளின் பல்வேறு உரிமைகளையும் பறித்துவிடுவது குறித்து அய். இளங்கோவன் விரித்திருப்பது கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இச்செயல் தலித் மாணவர்கள் கல்வியில் திறமையானவர்களாக வளர்வதை நேரடியாகவே தடுத்துவிடுகிறது.

ஆராய்ச்சி படிப்பிற்கு அரிதான தலித் மாணவர்களே வருகின்றனர். அவர்களின் பொருளாதாரச் சூழல், ஆராய்ச்சியை நெறிப்படுத்துவதற்கான நெறியாளர் கிடைப்பதில் இருந்து வருகின்ற சிக்கல் தலித் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதிலிருந்து விலக்குகிறது. அறிவியல் புலத்தில் ஆராய்ச்சி முடித்து டாக்டர் பட்டம் பெற்ற தலித்துகளை விரல்விட்டு எண்ணும் அளவிற்கே நிலைமை இருக்கிறது. சமூக அறிவியல் புலத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கின்ற பல தலித்துகளில் நானும் ஒருவன். என்னை டாக்டருக்குப் (மருத்துவர்) படிக்க வைக்க வேண்டும் என்ற என் தந்தையின் கனவு தகர்க்கப்பட்ட போதிலும் போதிலும் நான் டாக்டர் (முனைவர்) பட்டம் பெற்றிருக்கிறேன். ஆனால் இதனைக்கூட கண்டு மகிழ்வதற்கு அவர் இன்று உயிரோடு இல்லை. இப்புலத்தில் பட்டம் பெற்றிருந்த போதிலும் வேலை வாய்ப்பு கிடைப்பது கடினமான ஒன்றாக இருந்து வருகிறது.

சமீபத்தில் நிரப்பப்பட்ட பின்னடைவுப் பணியிடங்களில் தலித்துகளுக்கு கல்லூரி விரிவுரையாளர் பணி கிடைத்திருக்கிறது, வேலை கிடைக்காதவர்களும் இருக்கின்றனர். இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய முக்கியமான சிக்கல் இருக்கிறது. அதாவது, அறிவியல் புலத்திலிருந்து விலக்கப்படுவதல் சமூக அறிவியலில் பட்டம் பெறுகின்ற தலித்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இவர்களில் இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அவர்களின் கல்வித் தகுதிக்குரிய பணி கிடைக்காத காரணத்தினால் நான் அறிந்த தலித்துகள் தமிழ்நாடு அரசாங்கம் நடத்துகின்ற மதுபானக் கடையில் பணி செய்கின்றனர். இதில் சட்டம் படித்த தலித்துகளும் உண்டு. வெறும் பட்டம் அல்லது சட்டம் படிப்பது தலித்துகளுக்கு அதிகம் பயனளிக்காது என்ற அம்பேத்கரின் அன்றைய கணிப்பு மிகச் சரி என்பதற்கு முனைவர் மற்றும் சட்டம் படித்த இன்றைய தலித்துகள் மதுக் கடைகளில் வேலை செய்து வருவது சாட்சியாய் இருக்கிறது.

ஒரு கல்வி நிலையத்தில் இணைந்து படிப்பது என்பதன் இறுதிக் கட்டம் முதுமுனைவருக்கான ஆராய்ச்சி படிப்பாகும், இதில் நிதி உதவியோடு மட்டுமே ஆராய்ச்சியில் ஈடுபடுவர். பல்கலைக் கழக மானியக் குழுவில் முதுமுனைவர் ஆராய்ச்சிக்கு இரண்டு வகையில் நிதி உதவி வழங்கப்படுகிறது. தலித் மாணவர்கள் சமூக அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கென முதுமுனைவர் ஆராய்ச்சி நிதி வழங்கும் திட்டம் இருக்கிறது. அறிவியல் புலத்தில் மட்டுமே முதுமுனைவர் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கென டாக்டர். கோத்தாரி முதுமுனைவர் ஆராய்ச்சி திட்டம் இருக்கிறது. இதில் அனைத்து சாதியினரும் விண்ணப்பித்து அதன் நிதி உதவியைப் பெற்றுக் கொள்ளலாம். தலித் ஒருவர் முதுமுனைவர் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தலித்துகளுக்கென இருக்கின்ற திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பினால் முனைவர் பட்டம் பெற்றிருத்தல், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டிருத்தல் ஆகியன தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் கோத்தாரி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை அவர் முனைவர் பட்ட ஆய்வேட்டினை சமர்ப்பித்திருப்பதே போதுமானது. மேலும், ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிட்டிருக்க வேண்டாம்.

அதாவது அனைத்து சாதியினரும் விண்ணப்பிக்கக்கூடிய கோத்தாரி முதுமுனைவர் ஆராய்ச்சி நிதிக்கு குறைந்த தகுதிகளும், தலித்துகளுக்கான திட்டத்தில் கூடுதலான தகுதிகளும் இருக்க வேண்டும் என்று விதியை ஏற்படுத்தியுள்ளது பல்கலைக் கழக மானியக் குழு. அறிவியல் புலத்தில் முதுமுனைவர் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தலித்துகள் விரும்பினால் அவர்கள் கோத்தாரி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயலும். ஆனால் எத்தனை தலித் மாணவர்கள் அறிவியலில் முனைவர் பட்டத்தில் ஈடுபட்டு அதற்கான ஆய்வேட்டினை சமர்ப்பித்திருக்கின்றனர் என்றால்? அத்தகைய நபர்களை காண்பது அரிது. சமூக அறிவியல் புலத்தில் முதுமுனைவர் ஆராய்ச்சியில் ஈடுபட தலித்துகள் விரும்பினால் அவர்களால் ஆய்வுப் பட்டம் சமர்ப்பித்ததும் அதில் சேர்வது இயலாது. முனைவர் பட்ட ஆய்வேட்டினை சமர்ப்பித்த பின்னர் அது மதிப்பீடு செய்யப்பட்டு பட்டம் வழங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு அல்லது அதற்கு மேலான வருடங்கள்கூட ஆகலாம். அது வரை முதுமுனைவர் ஆராய்ச்சி நிதிக்கு விண்ணப்பிக்காமலேயே காத்திருப்பது என்பது ஆராய்ச்சியில் ஈடுபடுவதில் தொய்வினை ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவு தலித்துகள் முதுமுனைவர் ஆராய்ச்சியில் ஈடுபடும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்காமல் போகும் அபாயமே இருக்கிறது.

முடிவுரை

காலனிய ஆட்சிக் காலத்தில் கல்வி பயில்வது என்பதே வேலை வாய்ப்பிற்க்கான உத்தரவாதத்தினைக் கொடுத்தது. அப்பொழுது சமூக அறிவியல் படித்தால் வேலை கிடைப்பது அரிது என்றோ அல்லது அறிவியல் படித்தால் வேலை கிடைத்துவிடும் என்ற நிலையோ இருந்திருக்கவில்லை. இக்காலத்தில் தலித்துகளை சமூக அறிவியல் புலத்தில் கல்வி கற்பதை திட்டமிட்டே விலக்கினர் சாதி இந்துக்கள். இன்றைய காலங்களில் சமூக அறிவியல் புலத்திற்கான மதிப்பு குறைந்து விட்டது, அறிவியல் புலத்தில் பட்டம் பெற்றால் வேலை வாய்ப்பு கிடைப்பது மிக எளிதாக இருந்து வருகிறது. ஆனால் அறிவியல் புலத்தில் கல்வி கற்பதிலிருந்து தலித்துகளை திட்டமிட்டு விலக்கப்படுகிறார்.

காலனிய ஆட்சிக் காலத்திலும் இன்றும் தலித்துகள் கல்விப் புலத்திலிருந்து விலக்கப்படுவதற்கு இடையில் வேற்றுமை இல்லை. இந்த விலக்குதல் தலித்துகளை பொருளாதாரத்தில் முன்னெறுவதிலிருந்து தடுத்துவிடுகிறது. இதனால் தலித்துகள் மேலும் மேலும் சமுக பண்பாட்டு மற்றும் அரசியல் வெளியிலிருந்து விலக்கப்படுவதற்கே வித்திடும். கோடை விடுமுறைக்குப் பின்னர் கல்வி நிலையங்கள் திறக்கின்ற பொழுது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கட்டாய நன்கொடை என்ற பெயரில் நடைபெறும் கல்வி வணிகத்திற்கு எதிராக கல்வி அமைச்சர் மற்றும் சமூக ஆர்வலர்களின் குரல் கொடுக்கின்றனர், மாணவர் இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. தலித்துகளுக்கு முதலில் அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைத்தல் அதன் பின்னர் கட்டாய நன்கொடை என இரண்டு சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. படிப்பதற்கே இடமே கிடைக்காத பொழுது தலித்துகள் இடம் கிடைப்பதற்கான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இப்போராட்டம் அவர்களால் “தனி”த்தே நடத்தப்படுகிறது, “பொது” மக்களின் ஆதரவு அதற்கு இல்லாதிருக்கிறது.

[1] Suma Chitnis, 'Education for Equality:Case of Scheduled Castes in Higher Education', Economic and

Political Weekly, Vol. VII (August: 1972), pp.1675-1681.

[1] Kusum K Premi, 'Educational for the Scheduled Castes: Role of Protective Discrimination in

Equalisation', Economic and Political Weekly, Vol. IX (November: 1974), pp.1902-1910.

[1] A. R. Kamat, Education and Social Change amongst the Scheduled Castes and Scheduled Tribes,

Economic and Political Weekly, (August: 1981), pp.1279-1284.

[1] L. F. Rush brook Williams, India in 1920 (Calcutta: Superintendent Government Printing, 1921), p. 158.

[1] MLCD, 27 January 1932, Vol. LIX, p. 145.

[1] MLCD, 24 February 1930, Vol. LII, p. 31.

[1] MLCD, 28 November, 1938, Vol. VIII, p.85.

[1] K. Ragupathi, The History of Devendrakula Vellalar Movement in Tamil Nadu, 1920-2000, an

unpublished Ph.D. submitted to Manonmaniam Sundaranar University, Tirunelveli (December: 2007), p. 96-97.

[1] MLCD, 04 March 1926, Vol. XXVIII, p. 95, 27 November 1928, Vol. XLV, p.183.

[1] MLCD, 26 August 1925, Vol. XXIV, pp.788-789.

[1] காலனிய ஆட்சிக்காலத்தில் பகல் மற்றும் இரவுநேரங்களில் இயங்கும் பள்ளிகள் இருந்தன

[1] MLCD, 06 September 1926, Vol. XXXII, pp. 292-293.

[1] MLCD, 01 November 1933, Vol. LXVIII, p.286.

[1] MLCD, 01 November 1933, Vol. LXVIII, p.286.

[1] MLCD, 04 September 1926, Vol. XXXII, pp. 219-220.

[1] L. F. Rush brook Williams, India in 1921-22 (Calcutta: Superintendent Government Printing, 1922), p.

218.

[1] MLCD, 28 November, 1938, Vol. VIII, p.85.

[1] MLCD, 25 March 1924, p. 1089, MLCD, 24 February 1930, Vol. LII, p.31.

[1] L. F. Rushbrook Williams, India in 1920 (Calcutta: Superintendent of Government Printing, 1921), p.

159.

[1] Madras Government and Uplift of Harijans, Harijans, (October: 1934), Vol. II, No. 37, p. 294.

[1] MLCD, 04 March 1927, Vol. XXXIV, pp.256-257.

[1] MLCD, 06 September 1926, Vol. XXXII, pp. 292-293.

[1] MLCD, 14 December 1925, p.26.

[1] தகவல்:பாலசுப்பிரமணியன் , திருப்பனிகரிசல்குலம்.

[1] MLCD, 06 September 1926, Vol. XXXII, pp. 292-293.

[1] Grant of Concession to Harijans (Madras: Government of Madras, 1959), p. 2.

[1] அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி:19 பக்:35&40.

[1] கள ஆய்வு 21 ஜனவரி 2009

[1] துண்டறிக்கை, ஆதிதிராவிடன் புரட்சிக்கழகம், திருநெல்வேலி மாவட்டம்

[1] தகவல்: எட்வின், திருநெல்வேலி 01 ஜூலை 2009

[1] கோ ரகுபதி, அந்தப் பாவிகளை தண்டிப்பாராக, 2006ல் எழுதி முடிக்கப்பட்ட ஆனால் வெளியிடப்பட்டிராத சுய வரலாறு

: பால்ஸி, அருமனை, கன்னியாகுமாரி மாவட்டம், 29 ஜூன் 2009.

அய். இளங்கோவன் வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே! எங்களிடம் வராதீர்கள், தலித் முரசு

(பிப்ரவரி: 2009), பக். 18-20.

(புதுவிசை ஜூலை 2009 இதழில் வெளிவந்த கட்டுரை)

Tuesday, September 29, 2009

பொருளாதார நெருக்கடியும் அமெரிக்காவில் வர்க்கமோதலின் மீள்எழுச்சியும்



1929 பின்னரான பாரிய பொருளாதார நிதி நெருக்கடி வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கியான லெஹ்மன் பிரதர்ஸின் வீழ்ச்சியுடன் ஆரம்பித்து கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. பல பொருளாதார பகுப்பாய்வாளர்கள் தற்போதைய நெருக்கடி பெருமந்தநிலையைக்கூட மறைத்துவிடும் தன்மையை கொண்டுள்ளது என்று அதிகரித்தளவில் நம்புகின்றனர். இந்த நெருக்கடி மாதங்கள் என்றில்லாது பல ஆண்டுகள் நீடிப்பதுடன் இதன் நீண்ட கால விளைவுகள் மிகப் பாரியதாக இருக்கும். வரலாறு படைக்கப்படுகிறது, இந்த நெருக்கடியில் இருந்து வெளிவரும் உலகம் செப்டம்பர் 15, 2008 அன்று லெஹ்மன் பிரதர்ஸ் சரியும் முன் இருந்த உலகில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையானதாக இருக்கும்.

பொருளாதார நிலைமுறிவின் அளவை வரையறுத்துக்கொள்ளவது கடினமாகும். உலக நிதியக்கரைப்பை தூண்டிய பொறுப்பற்ற செயல்களை நடத்திய வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்களை நிலைநிறுத்துவதற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் சூறையாடி அளித்த டிரில்லியன் கணக்கான டாலர்கள் வேறு எந்தப் பொருளாதார வரலாற்றிலும் இதற்கு முன்பு இருந்ததில்லை. போர்ட் நாக்ஸில் (திஷீக்ஷீt ரிஸீஷீஜ்) உள்ள அனைத்துத் தங்கத்தையும் ஒரு பெரும் குற்றபுத்தி உடையவன் திருடிவிடக் கூடுமேயானால், அக்குவிப்பின் மதிப்பு கூட பிரச்சனைக்குரிய சொத்துக்களை விடுவிக்கும் திட்டத்தில் (ஜிக்ஷீஷீuதீறீமீபீ கிssமீt ஸிமீறீவீமீயீ றிக்ஷீஷீரீக்ஷீணீனீ-ஜிகிஸிறி) வங்கிகளுக்கு அள்ளிக் கொடுக்கப்பட்ட பணத்தைவிட பெரிதும் குறைவாக இருக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கணக்குப்படி வங்கிகளின் இழப்புக்கள் கிட்டத்தட்ட 4 டிரில்லியன் டாலராக இருக்கக்கூடும். மொத்த இழப்புக்கள் 50 டிரில்லியன் டாலர் என இருக்கும். இதில் 25 டிரில்லியன் டாலரில் இருந்து 30 டிரில்லியன் டாலர் வரை உலகப் பங்குச் சந்தைகளில் பங்கு மதிப்புக்களின் சரிவும் அடங்கும்.

உலகப் பொருளாதாரச் சரிவின் விரைவுத்தன்மை முன்னோடியில்லாததாகும். 2008 உடைவின் உடனடிப் பாதிப்பை 1929 உடன் ஒப்பிடுகையில், இரு புகழ்பெற்ற பொருளாதார வல்லுனர்களான ஙிணீக்ஷீக்ஷீஹ் ணிவீநீலீமீஸீரீக்ஷீமீமீஸீ, ரிமீஸ்வீஸீ ளி'ஸிஷீuக்ஷீளீமீ தற்போதைய நிலைமை மிக மோசம் என்று கூறியுள்ளனர். 1929 உடைவைத் தொடர்ந்த ஆறு மாத காலத்தில் ஏற்பட்ட 5 சதவிகித குறைவுடன் ஒப்பிட்டால் தற்போதைய உற்பத்தி 12 சதவிகிதம் சரிவுற்றுள்ளது. முந்தைய நெருக்கடியில் 5 சதவிகித வீழ்ச்சி என்று இருந்த வணிகத்துடன் ஒப்பிட்டால், இது தற்பொழுது 16 சதவிகித வீழ்ச்சி ஆகும். 1929 வீழ்ச்சியின் மிக முக்கிய நிகழ்வு வோல் ஸ்ட்ரீட் பாரியளவில் சரிந்தது என்றாலும், 2008 கடைசி மாதங்கள் மற்றும் 2009 முதல் மாதங்களில் சந்தைச் சரிவு மிகமிக அதிகமாகும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் முன்னோடியில்லாத வகையில் உலக உற்பத்தி சரிவைக் கண்டுள்ளது. மார்ச் வரை, ஐரோப்பிய உற்பத்தி ஓராண்டிற்கு முன்பு இருந்ததைவிட 12 சதவிகிதம் சரிந்துவிட்டது, பிரேசிலிய உற்பத்தி 15 சதவிகிதச் சரிவு; தைவானில் உற்பத்தி 43 சதவிகிதம் குறைந்துள்ளது; அமெரிக்காவில் சரிவு இதுவரை 11 சதவிகிதம். வணிகத்தை பொறுத்த வரையில் ஜேர்மனிய ஏற்றுமதிகள் 20 சதவிகிதம் குறைந்துவிட்டன; ஜப்பானின் ஏற்றுமதிகள் 46 சதவிகிதம் சரிந்து விட்டன; மேலும் அமெரிக்க ஏற்றுமதிகள் 23 சதவிகிதம் குறைந்துவிட்டன.

பொருளாதார நெருக்கடியின் அளவு மற்றும் அதன் அதிர்ச்சிக்கு உட்படுத்தும் பாதிப்பின் தன்மை பற்றிய தெளிவான புள்ளிவிவரங்களின் குறிப்புக்கள் வேலையின்மையுடன் தொடர்புடைய புள்ளிவிவரங்கள் மூலம் அறியப்படுகின்றன. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (மிலிளி) 2009ம் ஆண்டு நிறீஷீதீணீறீ ஜிக்ஷீமீஸீபீs அறிக்கை உறையவைக்கும் தகவலைக் கொடுக்கிறது. 2008ல் வேலையின்மை முந்தைய ஆண்டை விட 10.7 மில்லியன் அதிகமாயிற்று. இது 1998 ஆசிய நிதிய நெருக்கடிக் காலத்தில் இருந்து மிக அதிகமானது ஆகும். உலகில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 190 மில்லியன் என்று ஆயிற்று; இவர்களுள் 109 மில்லியன் ஆண்கள், 81 மில்லியன் பெண்கள் ஆவர். இளைஞர்களிடையே வேலையின்மை என்பது 76 மில்லியனை எட்டியுள்ளது.

2009 ல் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (மிலிளி) வேலையின்மை கணிப்புக்கள் மூன்று வெவ்வேறு நெருக்கடி நிலைகளை தளமாகக் கொண்டவை. சர்வதேச தொழிலாளர் அமைப்பே அதிகம் நம்பும் மதிப்பீடு வரக்கூடிய வேலையின்மை உயர்வு 30ல் இருந்து 50 மில்லியன் மக்கள் வரை அதிகரிக்கலாம் என்ற நிலைப்பாடுதான். உண்மையான எண்ணிக்கை கூடுலாகத்தான் இருக்கும்.

அதிகம் அபிவிருத்தியடையாத நாடுகளின் வறுமைக் கோட்டில் நுழைவு என்பது நாளன்றுக்கு 2 டாலர் வருமானம் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மிக வறுமையான நிலையாக நாளன்றுக்கு 1.25 டாலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி இன்னும் கூடுதலாக 200 மில்லியன் தொழிலாளர்களை ஆழ்ந்த வறுமையில் தள்ளும் நிலையை தோற்றுவிக்கும் என்றும் இந்த அமைப்பு கணித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு மதிப்பிட்டுள்ள மற்றொரு முக்கிய பிரிவு பாதுகாப்பற்ற நிலையில் வேலை இருப்பதாகும். அதாவது மிகக் குறைந்த ஊதியங்கள், மோசமான பணி நிலைகள், உயர் வாய்ப்புக்கள் இல்லாத நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுதல் என்பதும் ஆகும். இத்தகைய தொழிலாளர்களின் எண்ணிக்கை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கருத்தின்படி 2008ல் 84 மில்லியன் அதிகரித்து மொத்தம் 1.6 பில்லியன் எனப் போயிற்று.

அதிகம் அபிவிருத்தியடையாத பகுதிகள் சமூக நிலைமை ஏற்கனவே பேரழிவு தரக்கூடிய நிலையில் இருக்கையில், முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி மோசமான பாதிப்பைத் தொழிலாள வர்க்கத்திடையே ஏற்படுத்தியுள்ளது. 30 பணக்கார நாடுகளில் பொருளாதார நெருக்கடி 25 மில்லியன் மக்களுக்கு வேலையின்மையை கூடுதலாகக் கொடுக்கும்.

அமெரிக்காவில் நிலைமை தொடர்ந்து சரிவடைகிறது. ஏப்ரல் மாதம் மற்றும் 563,000 மக்கள் தங்கள் வேலைகளை இழந்து தேசிய வேலையின்மை விகிதம் 8.9 என உயர்ந்தது. இப்பொழுது வேலையில்லா தொழிலாளர்களின் எண்ணிக்கை 13.7 மில்லியன் ஆகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் இது மிக உயர்ந்த எண்ணிக்கை ஆகும். பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து 6,000,000 தொழிலாளர்கள் வேலையில் இருந்து அகற்றப்பட்டுவிட்டனர். மார்ச் மாதம் வேலையின்மை கலிபோர்னியாவில் 62,000 அதிகரித்தது, புளோரிடாவில் 51,000 அதிகரித்தது, டெக்சாஸில் 47,000 அதிகரித்தது, வட கரோலினாவில் 41,000, இல்லிநோய்ஸில் 39,000, ஒகையோவில் 37,000 அதிகரித்தது. பிராந்திய அளவில் மிக அதிக வேலையின்மை மேற்கில் இருந்தது; இப்பொழுது அங்கு அது 9.8 சதவிகிதமாக உள்ளது. இது மத்திய மேற்கில் 9.0 ஆக உள்ளது.

மாநிலவாரியாக காணும்போது மிச்சிகனில் வேலையின்மை விகிதம் (மார்ச்சை ஒட்டி) 12.6 என நாட்டில் மிக அதிகமானதாக இருந்தது. இதைத் தொடர்ந்து ஒரேகான் 12.1 சதவிகிதம், தெற்கு கரோலினா 11.4 சதவிகிதம், கலிபோர்னியா 11.2 சதவிகிதம், வட கரோலினா 10.8 சதவிகிதம், ரோட் ஐலந்து 105 சதவிகிதம், நெவடா 10.4 சதவிகிதம் மற்றும் இந்தியானாவில் 10 சதவிகிதம் வேலையின்மை என்று உள்ளது.

இந்த வேலையின்மை தரங்கள் மற்ற தீவிர சமூக இடர்ப்பாடுகளின் அறிகுறிகளாக மாறுகின்றன: பேரலைகள் என ஏலத்திற்கு விடப்படுதல்கள், தனிநபர் திவால்தன்மை, கல்லூரிகளில் சேர்வதில் வீழ்ச்சி, அதிகரிக்கும் குற்ற விகிதங்கள், சுகாதார, பொதுநலனில் மக்கள் காணும் பொதுவான சரிவு ஆகியவை ஏற்பட்டுள்ளன. நாடெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின்மீது 10 சதவிகிதம் அல்லது அதற்கு மேலும் என்று ஊதிய வெட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவை அவர்களுடைய வாழ்க்கைத் தரங்களை அரித்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களை நிதியப் பேரழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளது.

வருங்காலம் பற்றி என்ன கணிக்க முடியும்? எந்தக் கட்டத்தில் "மிகக் கீழ் நிலை" என்பது அடையப்படும், ஒரு "மறு எழுச்சி" என்பது ஆரம்பமாகும்? சமீபத்தில் மார்ச் மாத மோச நிலையில் இருந்து உலகச் சந்தைகள் எழுச்சி பெற்றது ஒரு திருப்பத்தின் ஆரம்பம் என்று கூறப்படுகிறது. வங்கி முறைக்குள் பொதுப் பணத்தை பல பில்லியன் டாலர்கள் உட்செலுத்தியதை தவிர, மந்த நிலை தவிர்க்க முடியாமல் முடிவிற்கு வந்துவிட்டது என்று கூறும் பல நம்பிக்கை மிகுந்த கணிப்புக்களுக்கு ஆதாரமாக உறுதியான தகவல்கள் அதிகம் இல்லை. மிகச்சமீபத்திய அமெரிக்க வேலையின்மை புள்ளிவிவரங்கள் சற்றே குறைவான வேலை இழப்புக்கள் விகிதத்தை உறுதி கூறுகின்றனவே அன்றி வேறு எதையும் கூறவில்லை. அது ஒன்றும் பெரிய செய்தி எனக் கூற முடியாது. மேலும் "மறு எழுச்சி" பற்றி தவிர்க்க முடியாத ஊகம் தற்போதைய நெருக்கடி பற்றிய தவறான விளக்கத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. அது வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறுவதற்கில்லை, ஒரு கட்டத்தில் ஊகத்தில் சற்று முன்னேற்றம் இருக்கலாம். அதே போல் பொருளாதார நிலைமை இன்னும் மோசமாகக் கூடும் என்று நினைப்பதும் கடினம் அல்ல.

ஆனால் சந்தைகளிலும் உலகப் பொருளாதாரத்தின் பிற குறியீடுகளில் எத்தகைய குறுகிய கால ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், இவை முன்பு இருந்த நிலைக்கு திரும்பப் போவதில்லை. முந்தைய நிலைமைகள் சென்றுவிட்டன, மீண்டும் வாரா. இது உலக நிதிய முறைக்கு ஏற்பட்டுவிட்ட மகத்தான சேதத்தினால் மட்டும் அல்ல. இந்த நெருக்கடி இரண்டாம் உலகப் போருக்குப் பின் வெளிப்பட்ட உலக முதலாளித்துவத்தின் உலகளாவிய கட்டமைப்பின் முறிவைக் குறிக்கிறது. அமெரிக்காவில் இந்த நெருக்கடி தோன்றியது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. இந்த நெருக்கடியின் இன்றியமையாத முக்கியத்துவம் அமெரிக்காவில் உலக மேலாதிக்க பொருளாரார நிலைமை நீண்ட காலமாக சரிந்துவருவதில் இருந்து வந்துள்ளது என்பதுதான் நெருக்கடியின் துல்லியமான உண்மை ஆகும்.

அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தின் அடிப்படை மறுகட்டமைப்பு மற்றும் அது அடித்தளமாக கொண்டிருக்கும் சமூக வர்க்க உறவுகளில் மறுகட்டமைப்பு நடந்து கொண்டிருக்கும் வடிவைத்தான் இந்த நெருக்கடி கொண்டுள்ளது. இது இரண்டில் ஒரு வழியில்தான் தீர்க்கப்பட முடியும். ஒரு முதலாளித்துவ முறை அல்லது ஒரு சோசலிச அடிப்படையில். முதலாவதான முதலாளித்துவ முறையின்படி என்றால் அமெரிக்காவிலும், உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மிக மோசமான அளவிற்கு குறைந்திடும் என்ற பொருளைத்தரும். இத்தீர்விற்கு பாரிய உள்நாட்டு அடக்குமுறை, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் தகர்க்கப்படுதல் மற்றும் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் காணப்பட்டிராத அளவிற்கு இராணுவ வன்முறை கட்டவிழ்த்தல் ஆகியவை வரும்.

இந்தப் பேரழிவிற்கு ஒரே மாற்றீடு சோசலிசத் தீர்வுதான். அதற்கு அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுதல், தொழில்துறை, நிதிய மற்றும் இயற்கை இருப்புக்கள் மீது மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டை நிறுவதல் மற்றும் அழிவுதரும் இலாப, தனியார் சொத்து முறையைத் தொடர்தல் என்பதற்கு பதிலாக சமூத்தின் தேவைகள் முழுவதையும் தீர்த்து வைத்தலுக்கு அர்ப்பணிக்கப்படும் அறிவார்ந்த முறையில் உலகப் பொருளாதாரத்தை வளர்த்தல் என்பவை தேவையாகும்.

இந்த நெருக்கடி கடந்த 30 ஆண்டுகளாக வளர்ச்சியுற்ற அமெரிக்க ஊக்கம் பெற்ற "தடையற்ற சந்தை" முதலாளித்துவத்தை தளமாகக் கொண்ட உலக முதலாளித்துவ முறையின் ஊழல் மற்றும் ஒட்டுண்ணித் தன்மைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. சமூகத்தின் ஒரு மிகச் சிறிய பிரிவு பரந்த முறையில் செல்வக் கொழிப்பு அடைதலும், முன்னோடியில்லாத அளவிற்கு சமூக சமத்துவமின்மை பெருகுவதும் ஊழல் நலிந்த, நோயுற்ற பொருளாதார முறையில் அடையாளங்கள் ஆகும். நெருக்கடியின் கடுமையான தன்மையில், பொருளாதார வர்ணனையாளர்கள் பெருகிய முறையில் இந்த நெருக்கடிக்கு வழிவகுத்த கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் 1979ல் பிரிட்டனில் மார்க்ரெட் தாட்சர் பதவிக்கு வந்த காலம், மற்றும் அமெரிக்காவில் ரோனால்ட் ரேகன் 1980ல் பதவிக்கு வந்த நேரம் முதல் ஆரம்பிக்கப்பட்டன என்று ஒப்புக் கொள்கின்றனர். இவர்கள் இருவரும் அடைந்த வெற்றிகள், ஜோன் மேநார்ட் கீன்ஸினால் (யிஷீலீஸீ விணீஹ்ஸீணீக்ஷீபீ ரிமீஹ்ஸீமீs) முன்வைக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட முதலாளித்துவ முறையை நிராகரித்து மில்ரன் ப்ரீட்மானுடைய (விவீறீtஷீஸீ திக்ஷீவீமீபீனீணீஸீ) "அடிப்படைவாத" தடையற்ற சந்தை அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்தது.

இப்பகுப்பாய்வில் உண்மையின் கூறுபாடு உள்ளது; ஆனால் இது இன்னும் அடிப்படைப் பிரச்சினையைத் தவிர்க்கிறது: இந்த மாறுதல் ஏன் நடக்கிறது? கீன்சியனிசத்தில் இருந்து ப்ரீட்மனின் தடையற்ற சந்தை அடிப்படைவாதத்திற்கு மாறியது பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்தின் மிகச் சக்தி வாய்ந்த பிரிவுகள் ஏற்கனவே இருந்த முதலாளித்துவ முறையின் நெருக்கடிக்கான பிரதிபலிப்பாகும். 1967 இலேயே கீன்சினால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதலாளித்துவத்தை உறுதிப்படுத்திக் கட்டமைக்க தயாரித்திருந்த வழிவகைகள் முறிந்துவருகின்றன என்பதற்கான பெருகிய அடையாளங்கள் இருந்தன. 1944ம் ஆண்டு பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில் (ஙிக்ஷீமீttஷீஸீ கீஷீஷீபீs சிஷீஸீயீமீக்ஷீமீஸீநீமீ) ஏற்கப்பட்டிருந்த டாலர்-தங்க மாற்று முறை, போருக்குப் பிந்தைய பொருளாதார விரிவாக்கத்திற்கு அடிப்படையைக் கொடுத்த சர்வதேச உறுதியான நிதிய முறையை நிறுவியது, 1960 களின் கடைசிப் பகுதிகளில் பெருகிய முறையில் செயல்பட முடியாத நிலை வந்தது. ஆகஸ்ட் 1971ல் அந்த முறை முற்றிலும் முறிவு அடைந்தது; ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் டாலர்-தங்க மாற்று முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஒன்றுடன் ஒன்று தொடர்புற்ற மூன்று காரணிகள் பிரெட்டன் வூட்ஸ் முறிவிற்கு காரணமாயின. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் அமெரிக்கா பெற்றிருந்த மேலாதிக்க பொருளாதார நிலைமை, 1950களிலும் 1960களிலும் படிப்படியே அரிப்பை பெற்றது முதலாவது காரணம் ஆகும். 1960 களின் நடுப்பகுதியில் இலாப விகிதத்தின் பொதுச் சரிவு ஏற்பட்டு அமெரிக்க, ஐரோப்பிய. ஜப்பானிய பெருநிறுவனங்களுக்கு கணிசமான அழுத்தத்தை கொடுத்து உலகப் போட்டி அழுத்தங்களை தீவிரமாக்கியது இரண்டாவது காரணம் ஆகும். இறுதியாக இன்னும் தீவிரமாக நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக தொழிலாள வர்க்கத்தை சுரண்ட நினைத்த முதலாளித்துவ வர்க்கத்தின் முயற்சிகளை உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணம் திகைப்பிற்கு உட்படுத்தியது ஆகும்.

1967 முதல் 1975 வரையிலான காலம் தொழிலாள வர்க்கப் போர்க்குணம் மற்றும் அரசியல் தீவிரமயமாக்கலின் வெடிப்பு ஆகியவற்றால் குணாதிசயப்படுத்தப்பட்டிருந்தது. மே-ஜூன் 1968ல் பிரெஞ்சு பொது வேலை நிறுத்தம், இத்தாலியில் 1969ல் மிகப் பெரிய வேலைநிறுத்தம், தென்னமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி, வலதுசாரி பழைமைவாத அரசாங்கத்தை பதவியில் இருந்து பின்னர் வெளியேற்றிய பிரிட்டனில் சக்திவாய்ந்த வேலைநிறுத்துங்கள், போலந்தில் ஸ்ராலினிச ஆட்சியை அதிர்ச்சிக்கு உட்படுத்திய நிபீsஸீsளீ கப்பல்கட்டும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், அந்தந்த நாடுகளில் பின்னர் சர்வாதிகார ஆட்சிகளை இறுதியில் நசுக்கிவிட்ட கிரேக்க, போர்த்துகீசிய, ஸ்பெயின் தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆகியவை புரட்சிகர பரிணாமத்தைக் கிட்டத்தட்ட அடைந்த, தொழிலாளர் போர்க்குணத்தின் மிக முக்கியமான, உலகளாவிய வெளிப்பாடு ஆகும். இந்த இயக்கம் முக்கிய முதலாளித்துவ மையங்களுக்கு தொலைவிலும் விரிவடைந்திருந்தது. ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் மக்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க, ஐரோப்பிய காலனித்துவ முறைகளின் எஞ்சிய பகுதிகள் அகற்றப்படுவதற்கு எதிரான வெகுஜன போராட்டங்களில் ஈடுபட்டனர். வியட்நாமிய மக்களின் போராட்டமும் இந்த உலகளாவிய இயக்கத்தின் பெரும் வீரம் செறிந்த வெளிப்பாடு ஆகும்.

அமெரிக்காவில் உள்ள தொழிலாள வர்க்கமும் இந்த உலகந்தழுவிய நிகழ்போக்கில் முக்கிய பங்கை கொண்டிருந்தது. 1950, 1960 களில் அமெரிக்க சமூகத்தை அதிர்ச்சிக்கு உட்படுத்திய வரலாற்றுப் புகழ்மிக்க குடியுரிமைகளுக்கான போராட்டம் சாராம்சத்தில் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மிக சுரண்டப்பட்ட, மிக வறிய பிரிவுகள் அமெரிக்க சமூகத்தின் வகுப்பு கட்டமைப்பில் வேரூன்றியிருந்த அடக்குமுறை, பிரிவினை இவற்றிற்கு எதிரானவையாகும். லொஸ் ஏஞ்சல்ஸ், நெவார்க் மற்றும் டெட்ரோயிட் போன்ற நகரங்களில் இப்போராட்டங்கள் ஒரு எழுச்சி வடிவமைப்பை கொண்டிருந்தன. மாநில அரசாங்கங்கள் இதற்கு விடையிறுக்கும் வகையில் தேசியப்பாதுகாப்புப் படைகளை திரட்டி இராணுவச்சட்டத்தையும் செயல்படுத்தினர். டெட்ரோயிட்டை பொறுத்தவரையில் ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் மக்கள் எழுச்சியை அடக்குவதற்கு மத்திய அரசின் துருப்புக்களை அனுப்பி வைத்தார்.

வர்க்கப் போர்க்குணத்தின் மிக அடிப்படை குறியீடான வேலைநிறுத்தம் 1960களின் நடுப்பகுதியில் இருந்து தொழிற்துறை தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் இடையே வியத்தகு முறையில் அதிகரித்தது. 1930கள் மற்றும் 1940களின் கடைசியில் சூறாவளியென நடைபெற்ற போராட்டங்களுக்கு பின்னர் 1950களிலும் 1960களின் ஆரம்பப்பகுதியிலும் படிப்படியாக வேலைநிறுத்தங்களில் சரிவு ஏற்பட்டது. 1959ம் ஆண்டுதான் இதற்கு விதிவிலக்கு; அந்த ஆண்டு 116 நாட்கள் கடுமையான வேலைநிறுத்தம் ஏற்பட்டு அதில் நூறாயிரக்கணக்கானன எஃகு நிறுவனங்களின் தொழிலாளர்கள் பங்கு பற்றி மில்லியன்கணக்கான மனித நாட்கள் உற்பத்தி நேரத்தில் இழக்கப்பட்டன. 1960க்கும் 1966க்கும் இடையே வேலைநிறுத்தங்களின் விளைவாக இழக்கப்பட்ட மனித நாட்கள் ஆண்டு ஒன்றுக்கு 10 முதல் 16 மில்லியனுக்கு இடைப்பட்டு ஊசலாடியது. 1967ல் இந்த நிலைமை முற்றிலும் மாறி வேலை நிறுத்தங்கள் முதலாளிகளுக்கு 31 மில்லியன் மனித நாட்களை இழப்பை ஏற்படுத்தின. இந்த எண்ணிக்கை 1968ல் 35 மில்லியன் மனித நாட்கள் என்று ஆயிற்று. 1969ல் அது சற்றே குறைந்து 29 மில்லியன் மனித நாட்கள் என்று இருந்தது. 1970ல் வேலை நிறுத்தங்களால் ஏற்பட்ட மனித நாட்கள் இழப்பு 52.7 மில்லியன் என்று உயர்ந்தது. அந்த ஆண்டில்தான் ஜெனரல் மோட்டார்ஸ§க்கு எதிராக கார்த் தொழிலாளர்கள் ஒரு இரு மாத காலம் நீடித்த வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். அந்த ஆண்டுதான் கென்ட் மாநில பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்புப் பிரிவு நான்கு மாணவர்களை படுகொலை செய்தது.




வேலைநிறுத்த அளவுகள் குறைந்து 1972, 1973ல் 16 மில்லியன் வேலை நாட்கள்தான் இழக்கப்பட்டன; இதற்குக் காரணம் ஊதியக் கோரிக்கைகளை கட்டுப்படுத்த நிறுவப்பட்ட அரசாங்கம்-நிர்வாகம்-தொழிலாளர் குழுக்களில் கிதிலி-சிமிளி, ஜிமீணீனீstமீக்ஷீs, ஹிகிகீ ஆகியவற்றின் கூட்டுழைப்பு ஆகும். ஆனால் 1974ம் ஆண்டு போர்க்கணமிக்க நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் தலைமையில் வேலை நிறுத்தங்கள் கிட்டத்தட்ட 32 மில்லியன் மனித நாட்களை தகர்த்தன. 1975ல் வேலைநிறுத்த அளவுகள் 17.5 மில்லியன் நாட்கள் இழப்பு என்று குறைந்தன. ஆனால் தசாப்தத்தின் எஞ்சிய பகுதியில் 1976ல் இருந்து 1980 முடிய வேலைநிறுத்தங்கள் முதலாளிகளுக்கு 20 முதல் 23 மில்லியன் மனித நாட்கள் இழப்பை ஏற்படுத்தின.

இப்புள்ளிவிவரங்கள் 1970கள் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் போர்க்குணத்திற்கு சான்றாக உள்ளவை. வர்க்கப் போராளித்தனத்தின் உயர்கட்டம் 1977-78 ல் நடந்த தேசிய நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஆகும். வேலைநிறுத்ததில் ஈடுபட்டவர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவம் பேச்சுவார்த்தைகள் மூலம் கொண்டு வந்த இரு விற்றுவிடும் ஒப்பந்தங்களை நிராகரித்து ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் வேலைக்கு திரும்புக என்று இட்ட ஆணையையும் மீறினர். ஜிம்மி கார்ட்டர் இகழ்வான ஜிணீயீt-பிணீக்ஷீtறீமீஹ் சட்டத்தின்கீழ் இதற்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வரலாற்றுப் பரிசீலனை கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்க சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை புரிந்து கொள்ள அவசியமானதாகும். இந்த ஆண்டு தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஆளும் வர்க்கம் மேற்கொண்ட கடுமையான எதிர் தாக்குதலை தொடக்கிய மூன்று நிகழ்வுகளின் 30வது நிறைவு ஆண்டைக் குறிப்பது ஆகும். இந்த எதிர் தாக்குதலுக்கான நிலைமைகள், 1960, 1970களின் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள், போர்க்குணத்தை கொண்டிருந்தாலும் சுயாதீன அரசியல் முன்னோக்கு இல்லை என்ற காரணத்தால் தோன்றியவை ஆகும். தொழிற்சங்க அதிகாரத்துவம் ஜனநாயகக் கட்சியுடன் கொண்டிருந்த கூட்டு வெகுஜன இயக்கத்தை முதலாளித்துவ அரசியல் மற்றும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் தளைகளுக்குள் அடக்கி வைத்திருந்தது. வேறுவிதமாகக்கூறினால், இந்த இயக்கம் இறுதியில் மேலே செல்ல முடியாத பாதையில் முடிவுற்றது. இது ஆளும் வர்க்கத்திற்கு முந்தைய தசாப்தங்களில் அது கொண்ட தாக்குதல்களை மீண்டும் செய்வதற்கான வாய்ப்பை கொடுத்து மேலும் தாக்குதலில் ஈடுபட வைத்தது.

இந்த எதிர் தாக்குதல் ஒரு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜனாதிபதி கார்ட்டர் மத்திய வங்கிக் கூட்டமைப்பின் தலைவராக போல் வோல்க்கரை நியமித்ததில் தொடங்கியது. உலக சோசலிச வலைத் தளத்தின் முன்னோடியான ஜிலீமீ ஙிuறீறீமீtவீஸீ ஜூலை 27, 1979ல் இவருடைய நியமனம், "வேலைகள், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்கள் ஆகியவற்றின் மீதான யுத்தப் பிரகடனம் என்பதை குறிக்கிறது" என்று எச்சரித்திருந்தது. இப்பகுப்பாய்வு விரைவில் சரியென உறுதியாயிற்று. தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் முதுகெலும்பை முறிக்கும் முயற்சியில் வோல்க்கர் உடனே ஈடுபடும் வகையில் வட்டி விகிதங்களை முன்னோடியில்லாத அளவிற்கு உயர்த்தினார்; அது கடுமையான மந்தத்தை ஏற்படுத்தி வேலையின்மையை உயர்த்தியது. வோல்கக்ரின் கீழ் முக்கிய விகிதம் இறுதியில் 21.5 என்ற அளவிற்கு உயர்ந்துவிட்டது.

இரண்டாம் நிகழ்வு கிறைஸ்லர் கொடுத்த அறிவிப்பான அது டெட்ரோயிட்டில் உள்ள பல ஆயிரம் தொழிலாளர்களை கொண்ட புகழ்பெற்ற பிணீனீtக்ஷீணீனீநீளீ இல் உள்ள ஞிஷீபீரீமீ விணீவீஸீ முக்கிய ஆலையை மூட இருப்பதாகக் கூறியது ஆகும். இந்த முடிவு ஐக்கிய கார் தொழிலாளர் சங்கத்தினால் (ஹிகிகீ) ஏற்கப்பட்டது. அது வேலைகளை பாதுகாப்பதற்கு அடிமட்டத் தொழிலாளர்கள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டது. எதிர்ப்புக்கள் நெரிக்கப்பட்டு ஆலை எந்த எதிர்ப்பும் இல்லாமல் மூடப்பட்டது.

இறுதியாக, ஹிகிகீ அதிகாரத்துவம் கிறைஸ்லருக்கு ஊதியங்கள் மற்றும் பணிநேர விதிகளில் முக்கிய விட்டுக்கொடுப்புக்களை செய்ய முடிவெடுத்தது. இது தொழிற்சங்கம்-நிர்வாகம் ஒத்துழைப்பு என்ற வடிவமைப்பை தொடக்குவதற்கும், பின்னர் வேலைகள், ஊதியங்கள், பணி நிலைமகள் மற்றும் அமெரிக்க தொழிலாள வர்ககத்தின் அனைத்துப் பிரிவின் நலன்கள் ஆகியவற்றை தாக்குவதற்கும் பாதை வகுத்தது. இந்த நிகழ்வுகள் அனைத்துமே றேகன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு நடந்தவை. ஜனவரி 1981ல் அவர் அதிகாரத்திற்கு வந்தது, 1979ல் கார்ட்டர் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் தொடக்கிய போரை தீவிரப்படுத்தி விரைவுபடுத்தியது. றிகிஜிசிளி தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 11,000 விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளை பதவி நீக்கம் செய்த றேகன் ஜனாதிபதிக் காலத்தினை சுட்டிக்காட்டும் நிகழ்வு அனைத்து பெருநிறுவனங்களுக்கும் வேலைநிறுத்தங்கள் முறித்தல் மற்றும் தொழிற்சங்கங்களை உடைத்தல் என்பது சட்டபூர்வமானது மற்றும் அதற்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும் என்ற சைகையை அனுப்பியது. ஆனால் றேகன் றிகிஜிசிளி வை அழித்தது கிதிலி-சிமிளி அதிகாரத்துவத்தின் ஆதரவை அவர் பெற்றிராவிட்டால் முடியாது; பாதிக்கப்பட்ட விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு வந்த எந்த நடவடிக்கைகையும் அது எதிர்த்தது.

இதைத் தொடர்ந்த ஆண்டுகளில் கிதிலி-சிமிளி அதிகாரத்துவம் அரசாங்கம் மற்றும் பெருநிறுவனங்கள் வேலைநிறுத்தங்களை உடைப்பதற்கு ஒப்புதல் கொடுத்தது. 1980களில் வேலைநிறுத்தங்களுக்கு ஒன்றும் குறைவு இருக்கவில்லை. நிக்ஷீமீஹ்லீஷீuஸீபீ பஸ் சாரதிகள், கொன்டினென்டல் விமான ஓட்டிகள், றிலீமீறீஜீs ஞிஷீபீரீமீ செப்பு சருங்கத் தொழிலாளர்கள், பிஷீக்ஷீனீமீறீ இறைச்சி பதனிடும் தொழிலாளர்கள், கிஜி விணீssமீஹ் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் என்பவை 1980 களின் வேலைநிறுத்தங்களில் நன்கு அறியப்பட்ட சிலதான். இவையும் மற்ற வேலைநிறுத்தங்களும் கிதிலி-சிமிளி ஆல் தனிமைப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்டன. பிஷீக்ஷீனீணீறீ வேலைநிறுத்தத்தை பொறுத்தவரையில், ஹிஸீவீtமீபீ திஷீஷீபீ ணீஸீபீ சிஷீனீனீமீக்ஷீநீவீணீறீ கீஷீக்ஷீளீமீக்ஷீs ஹிஸீவீஷீஸீ வேலைநிறுத்தத்தின் மையத்தில் இருந்து உள்ளூர் சங்கத்தின் அங்கீகாரத்தை இரத்து செய்துவிட்டது.

இவை அரசாங்கம், ஜனநாயகக் கட்சி மற்றும் பெருவணிகத்துடன் வேலை நிறுத்தங்களை உடைப்பதில் ஒத்துழைத்த நிலையில், பாசிச இத்தாலியிலும், நாஜி ஜேர்மனியிலும் 1920 கள், 1930களில் தொழிலாளர்-நிர்வாகம் கூட்டு அமைப்புக்களை உருவாக்கிய மாதிரி தொழிற்சங்கங்கள் தடையற்றமுறையில் வெளிப்படையாக பெருநிறுவன உறவுகளில் நுழைந்தன. இவை தடையற்ற முறையில் தொழிற்சங்கம் மற்றும் நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறின. கூட்டுழைப்புவாத சிந்தனைப்போக்கிற்கு மாதிரியாக இருந்த நடவடிக்கையில் ஹிகிகீ தன்னுடைய பெயருக்கும் மூன்று பெரிய கார்த்தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே "ஹிகிகீ-நிவி", "ஹிகிகீ-சிலீக்ஷீஹ்sறீமீக்ஷீ", "ஹிகிகீ-திஷீக்ஷீபீ" என்ற விதத்தில் ஒரு இடைக் கோட்டை (-) போட்டது.

ஒரு தசாப்தம் நாசவேலை நடத்தியபின் கிதிலி-சிமிளி, ஹிகிகீ, ஜிமீணீனீstமீக்ஷீs ஆகியவை பெயரளவிற்குத்தான் தொழிற்சங்கங்களாகின. தொழிலாள வர்க்க்தின் பாதுகாப்புடன் எவ்விதத்திலும் தொடர்புடைய அமைப்புக்களாக அவை இல்லாமற் போயின. மாறாக நிதிய மற்றும் மத்தியதர வர்க்கத்தின் உயர்ந்த அடுக்கின் சமூக நலன்கள், வலதுசாரி செயலர்கள் அடுக்கு இவற்றிற்கு அவை பணி புரிந்து பெறுநிறுவனங்களுக்காக, அவற்றின் ஒத்துழைப்புடன் தொழிலாளர்களை கண்காணித்தன.

தொழிலாள வர்க்கத்தின்மீது பெருநிறுவனக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள தொழிற்சங்கங்களின் தாக்கத்திற்கான சரியான புள்ளிவிவரச் சான்றுகள் அமெரிக்காவில் வேலைநிறுத்தங்கள் கிட்டத்தட்ட மறைந்து போனதுதான். 1990ல் இருந்து 1999க்குள் வேலைநிறுத்தத்தின் விளைவாக 6 மில்லியன் மனித நாட்கள் இழப்பு ஒரு ஆண்டில்கூட இருந்தது இல்லை. இந்த தசாப்தத்தில், நிலைமை இன்னும் மோசமாகப் போய்விட்டது. 17 மில்லியன் மனித நாட்களை இழக்க வைத்த நடிகர்களின் நீடித்த வேலைநிறுத்தத்தின் விளைவாக 20 மில்லியன் மனித நாட்கள் தகர்ந்த 2000ம் ஆண்டைத் தவிர, அடுத்த ஆண்டுகளில் (2002-2008) வேலைநிறுத்தங்கள் குறைந்த 659,000 நாட்களை 2002ல் இழந்ததில் இருந்து 2003ல் 4 மில்லியன் என உயர்ந்து நின்றதற்குள் ஊசலாடின. 2004ல் இருந்து வேலைநிறுத்தங்களினால் இழக்கப்பட்ட மனித நாட்கள் இழப்புக்கள் எண்ணிக்கை ஆண்டு ஒன்றுக்கு 2 மில்லியன் மனித நாட்கள்தாம்.

வர்க்கப் போராட்டம் வலதுசாரி தொழிற்சங்க அதிகாரத்துவ அமைப்புக்களால் அடக்கப்பட்டதன் விளைவுகள், சமூக சமத்துவமின்மை, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களில் தேக்கம் மற்றும் சரிவு, முன்னோடியில்லாத வகையில் அரசியல் அதிகாரத்தை செலுத்தும் நிதியத் தன்னலக்குழுவின் வெளிப்பாடு, ஜனநாயகம் அழிக்கப்பட்டது, இறுதியில் இராணுவவாதத்தின் வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் காணப்படலாம். அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் பிற்போக்குத்தன மற்றும் சமூக அளவில் அழிக்கும் தன்மையுடைய பொருளாதார வளர்ச்சி தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆழ்ந்து, தீவிரமாக நிர்வாகத்துடன் ஒத்துழைப்பதில் நம்பியிருந்தது.

ஆனால் இது ஒரு தனிப்பட்ட அமெரிக்க நிகழ்வு மட்டும் அல்ல என்பது வலியுறுத்தப்பட வேண்டும். இதை ஒத்த சமூக நிகழ்போக்குகள் சர்வதேச அளவில் நடைபெற்றன. 1968 முதல் 1975 வரையிலான காலத்தில் மகத்தான தொழிலாள வர்க்க எழுச்சியில் இருந்து முதலாளித்துவம் தப்பிப் பிழைத்தது; இதற்குக் காரணம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் காட்டிக் கொடுப்புக்கள்தாம். ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களும் தங்கள் இயல்பில் அமெரிக்காவில் முதலாளித்துவ சார்பு உடைய தொழிற்சங்கங்கள் கொண்டிருந்ததைப் போலவே பிற்போக்குத்தன பங்கை செயல்படுத்தின. பிரிட்டனில் மே 1979ல் மார்க்கரெட் தாட்சர் தேர்ந்தெடுக்கப்பட்டது தடையற்ற சந்தைக் கொள்கைகள் என்று அமெரிக்க கொள்கைகளை பிரதிபலித்த வகையில் அறிமுகம் ஆவதற்கு பாதை வகுத்ததுடன், அதையத்த சமூக விளைவுகளும் ஏற்பட்டன. அமெரிக்காவில் இருந்ததைப் போலவே தொழிலாளர் அதிகாரத்துவமும் இங்கு வலதுசாரி அரசாங்கத்தின் கொள்கைகளுக்காக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அடக்குவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

மேலும், ஸ்ராலினிச ஆட்சிகள் போருக்குப் பிந்தைய காலத்தில் அவை ஆதிக்கம் கொண்டிருந்த நாடுகளில் மீண்டும் முதலாளித்துவத்தை அறிமுகப்படுத்திய முடிவு கடந்த 20 ஆண்டுகளில் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது, முதலாளித்துவம் மீண்டும் கிழக்கு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகியவை அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய முதலாளித்துவத்திற்கு சுரண்டுதலுக்கு மகத்தான புதிய இருப்புக்களை திறந்துவிட்டது. பொருளாதார வகைகளைவிட முக்கியத்துவம் வாய்ந்தது சீனாவில் ஸ்ராலினிச ஆட்சி முதலாளித்துவ முறையை மீண்டும் அறிமுகப்படுத்தியதாகும். சீனப் பொருளாதார மாற்றம், குறைவூதியச் செலவுடைய உற்பத்தி மையமாக உலக மூலதனத்திற்கு ஆனது என்பது 1980களில் தொடங்கியது. இந்த நிகழ்வுப்போக்கு சமூகப் போராட்டங்களை தோற்றுவித்து அவை 1989ல் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்களால் நடத்தப்பட்ட மிகப் பெரிய எதிர்ப்புக்களில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஜூன் 1989ல் தியானன்மென்னில் நடைபெற்ற படுகொலை ஸ்ராலினிச ஆட்சிகளில் வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை அடக்கியதில் மிக முக்கியமான நிகழ்வு ஆகும்.

முதலாளித்துவ நாடுகளில் வர்க்கப் போராட்டங்களை அடக்குதல் மற்றும் கிழக்கு ஐரோப்பா, சீனாவில் முதலாளித்துவத்தை மீட்டது 1980கள், 1990கள் மற்றும் 21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் கடன்கள் நிறைந்திருந்த நிதிய தொழிலின் மகத்தான வளர்ச்சிக்கு தேவையான, சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவதுடன் தொடர்பைக் கொண்டது. இச்சூழலுக்கு சமூக, அரசியல் மற்றும் சட்டரீதியான அனைத்துத் தடைகளும் ஒடுக்கப்பட வேண்டும் என்று இருந்தது. அது மூலதனம் பொறுப்பற்ற முறையில் ஊக செயல்களில் ஈடுபட உதவியது.

ஒரு நீடித்த சமூக மற்றும் அரசியல் பிற்போக்குத்தனம் என்பது சமூக மற்றும் பொருளாதார முரண்பாடுகளை கட்டாயமாக, செயற்கையாக அடக்குவது என்பதைக் காட்டுகிறது. இந்த முரண்பாடுகள் எந்த அளவிற்கு அடக்கப்படுகின்றன என்பதின் அளவுதான் அதைத் தொடரும் நெருக்கடியின் ஆற்றலையும், தீவிரத்தையும் தீர்மானிக்கின்றது. எனவே தற்போதைய நெருக்கடியும் வெடிப்புத் தன்மை உடைய சமூக எழுச்சிகளுக்கு வகை செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

அதன் முதல் 100 நாட்களில் ஒபாமா நிர்வாகம் அதன் ஆற்றல்களை நிதியத் தன்னலக் குழுவின் செல்வம், பிற நலன்களை பாதுகாப்பதில் செலவிட்டுள்ளது. நிதி மந்திரி டிம் கீட்னர் நிர்வாகத்தின் பிணை எடுப்புத் திட்டத்தை அறிவித்ததை அடுத்துத் தொடங்கி, ஒபாமா கார்த் தொழிலில் மகத்தான மறுகட்டுமானத்திற்கு உதவியை வழங்கியபின் பலமடைந்த பங்குச் சந்தையில் சமீபத்திய ஏற்றம் வோல் ஸ்ட்ரீட் வெள்ளை மாளிகை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. வரிசெலுத்துபவர்கள் கொடுக்கும் நிதியில் இருந்து அளிக்கப்படும் வங்கிப் பிணை எடுப்பு நிதிய தன்னலக்குழுவிற்கு அதன் நலன்களை பாதுகாப்பதில் எச்செலவும் செய்யப்படும் என்பதைத் தெளிவாக்கியுள்ளது.

கார்த் தொழிற்துறை நெருக்கடியில் ஒபாமா குறுக்கிட்டது, நிர்வாகம் பரந்த பொருளாதார நிலைமுறிவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி மிகப் பெரிய அளவில், தொழிலாள வர்க்க இழப்பில், அமெரிக்காவிற்குள் சமூக உறவுகளை பெரிதும் மறுகட்டமைக்கும் விதத்தில் காண்கிறது என்பதை நிரூபித்துள்ளது. இதைத்தான் ஒபாமாவின் முக்கிய உதவியாளரான ஸிணீலீனீ ணினீணீஸீuமீறீ "ஒரு நெருக்கடி வீணாகச் சென்றுவிட அனுமதியாதீர்கள்" என்று கூறியபோது உண்மையில் மனதில் கொண்டிருந்திருக்கின்றார். மே 2ம் தேதி நியூ யோர்க் டைமஸின் வணிகப் பகுப்பாய்வாளர் திறீஷீஹ்பீ ழிஷீக்ஷீக்ஷீவீs எழுதினார்:

இது திரு.ஒபாமா, "சீனாவில் நிக்சன்" என்ற கணத்தை ஒத்திருப்பதைக் காண முடியும். ஒரு பழைமைவாத குடியரசுக் கட்சிக்காரர் உலகின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் நாட்டுடன் உறவுகளை ஆரம்பிக்க தேவைப்பட்டது போல் ஒரு தாராளவாத ஜனநாயகவாதியான ஒபாமாவிற்கு ஹிகிகீ வை உடைக்கத் தேவைப்பட்டது.

ஆனால் கீழ்க்கண்ட முக்கிய கருத்தையும் சேர்த்துக்கொள்ளுவதும் அவசியமாகும். ஹிகிகீ வை ஒபாமா "உடைக்க" வேண்டிய தேவை இல்லை. நீண்ட காலம் முன்னரே எவ்வித சமூக அரசியல் அர்த்தத்திலும் அது ஒரு தொழிற்சங்கமாக இருக்கவில்லை. ஹிகிகீ ஒரு ஒட்டுண்ணித்தன, சுரண்டல் தன்மையுடைய, போலித்தனமாக அமைப்பு உறுப்பினர்கள் முறையில் அதன் வருமானத்தை தளமாகக் கொண்டுள்ள பரந்த நிர்வாகத்தின் நலன்களை செயல்படுத்தும் அமைப்பு ஆகும்.

ஹிகிகீஇன் சர்வதேசத் தலைமையகம் 2,000க்கும் மேலானவர்களை வேலைக்கு வைத்துள்ளது. ஹிகிகீ இன் சர்வதேச ஊழியர்களின் எண்ணிக்கை பற்றிய குறிப்புக்கள் கிட்டத்தட்ட 130 சட்ட வடிவு பக்கங்களில் இருக்கிறது. ஹிகிகீஇன் சர்வதேச தலைமையகத்தின் 2008ம் ஆண்டில் ஊழியர்களுக்கு ஊதியங்கள், படிகள், செலவினங்கள் என்ற விதத்தில் சங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி 101,896,200 டாலர் ஆகும்!

"பணிப்பிரதிநிதிகள்", "ஒழுங்கமைப்பாளர்கள்", "தட்டெழுத்து, குறுக்கெழுத்துப் பணிபுரிபவர்கள்", "நிர்வாக உதவியாளர்கள் என்று பெரும்பாலான ஊழியர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். வேறுவிதமாகக்கூறினால் அவர்கள் பெயரளவு வேலைதான் செய்பவர்கள், உயர்மட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு ஆதரவு கொடுத்தல் என்பதைத் தவிர வேறு எதையும் செய்யத் தேவையில்லை. கிட்டத்தட்ட மொத்த ஊழியர்களில் கால் பகுதியினர் ஆண்டு ஒன்றுக்கு 110,000 டாலர் பெறுகின்றனர். பல நூறு "பணிப் பிரதிநிதிகள்" ஊதியங்களையும், கூடுதல் ரொக்க உதவித் தொகைகளையும் பெறுகின்றனர்; இது $120,000 க்கும் $140,000 க்கும் இடையே இருக்கும். "பணிப் பிரதிநிதிகள்" மாதிரி என்பவர்கள் தன்னுடைய 40 களின் கடைசிப்பகுதியில் அல்லது 50 களில் இருக்கும் பகுதி ஓய்வுபெற்றுவிட்ட வலதுசாரி அதிகாரத்துவத்தினராவர். இவர்கள் உள்ளூர் சங்கத்தில் இருந்து வருபவர் (ஆலைகள் மூடலால் அவை இல்லாமற்கூட போயிருக்கும்) ஒரு சில நூறு தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒப்பந்த உடன்பாடுகளை செயல்படுத்தவதை கண்காணிக்கவேண்டும் என்ற சற்றே தெளிவற்ற "பொறுப்பு" இவருக்கு உண்டு. ஹிகிகீ வின் சர்வதேச ஊழியர்களில் பலர் குடும்ப உறவினர்கள் ஆவர்; இதையட்டி குடும்பங்கள் கூட்டாக ஆண்டு ஒன்றுக்கு தொழிற்சங்கத்தில் இருந்து வருவாயாக 200,000 டாலர் பெறுவது அசாதாரண நிகழ்வு அல்ல.

ஹிகிகீ இன் உறுப்பினர்கள் எண்ணிக்கை மிகப் பெரிதாகக் குறைந்தது நிர்வாகத்தின் நிதிய நலன்களில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 2001ல் தொழிற்சங்கம் 701,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இதன் மொத்த சொத்துக்கள் 1.1 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டிருந்தன. 2008 ஐ ஒட்டி இதன் உறுப்பினர் எண்ணிக்கை 431,000 என்று கிட்டத்தட்ட 40 சதவிகிதம் குறைந்துவிட்டது.




ஆனால் இதே காலத்தில் ஹிகிகீ இன் சொத்துக்கள் 1.2 பில்லியன் டாலர் என்று உயர்ந்தன.




இப்படிச் சொத்துக்கள் உயர்ந்தது ஹிகிகீ நிர்வாகத்தின் வருமானத்திலும் கணிசமான முன்னேற்றத்தை கொடுத்தது. 2000ம் ஆண்டு சர்வதேச தலைமையகத்தில் தன்னுடைய ஊழியர்களுக்கு 89.6 மில்லியன் டாலர் ஊதியமாகக் கொடுத்தது. 2008ல் ஊதியங்கள் 100.9 மில்லியன் டாலர் என்று உயர்ந்துவிட்டன. வேறுவிதத்தில் இப்புள்ளிவிவரங்களை பார்த்தால், 2000த்தில் ஹிகிகீ இன் மத்திய அதிகாரத்துவம் தொழிற்சங்க உறுப்பினர் ஒவ்வொருவரிடம் இருந்து 133 டாலரை பெற்றது. எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மத்திய அதிகாரத்துவம் தொழிற்சங்க உறுப்பினரிடம் இருந்து தலா 233 டாலரை வருமானமாகப் பெற்றது.




இந்தப் புள்ளிவிவரங்களை பரிசீலிக்கையில் இவை ஹிகிகீ ன் சர்வதேச தலைமையகத்தில் உள்ள பணிபுரிபவர்களை மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்கிறது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இன்னும் பல மில்லியன்கள் உள்ளூர் தொழிற்சங்க நிலையங்களில் இருக்கும் ஊழியர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஹிகிகீ க்கும் அப்பால் பல நூற்றுக்கணக்கான மற்ற "தொழிற்சங்க" அமைப்புக்களும் இதே விதத்தில் செயல்படுகின்றன; இவை கூட்டாக பல பில்லியன் டாலர்களை ஊதியங்கள் இன்னும் பிற நலன்களுக்கு அள்ளிக் கொடுத்து உலகிலேயே மிக செலவு நிறைந்த பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிலாளர்-நிர்வாகக் கண்காணிப்பு பிரிவைத் தக்க வைத்துள்ளன.

ஒபாமா செய்தது அனைத்தும் ஹிகிகீஇன் ஒப்புதலுடன்தான் செயல்படுத்தப்பட்டுள்ளன. கிறைஸ்லருக்கும் ஹிகிகீ க்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம், நிர்வாகத்தின் திவால்தன்மைக்கு முன்பு இருந்ததில் கீழ்க்கண்ட விதிகள் இருந்தன: 1) வாழ்க்கைத்தரப் படிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன; 2) முன்பு பேச்சுவார்த்தைகள் மூலம் ஒப்புக் கொள்ளப்பட்ட வேலையின் அடிப்படையிலான மேலதிக கொடுப்பனவுகள் நிறுத்தி வைக்கப்படுகிறது; 3) கிறிஸ்துமஸ் காலத்தில் கொடுக்கப்படும் மேலதிக கொடுப்பனவுகள் நிறுத்திவைக்கப்படுகிறது; 4) ஊழியர்களுக்கு பணி இடைவெளிநேரம் கணிசமாக குறைக்கப்படுகிறது; 5) தற்காலிக தொழாளர்கள் பயன்படுத்தப்படுவது விரிவாக்கப்படுகிறது; 6) அனைத்து மோதல்களும் கட்டுப்பட வேண்டிய நடுவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.; 7) ஓய்வூதியக்காரர்களில் சுகாதார நலன்கள் உடனடியாகக் குறைக்கப்படுகின்றன.

கிறைஸ்லரின் திவால்தன்மை அறிவிப்பிற்கு பின்னர் ஹிகிகீ அதன் ஒபாமா நிர்வாகத்துடன் கொண்டிருக்கும் நெருக்கமான பிணைப்புக்கள் கிறைஸ்லர் தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க பாதுகாப்பை அளிக்கும் என்று கூறுகிறது. இது ஒரு பொய் ஆகும். மீண்டும், நோரிஸை மேற்கோளிடுவாம்:

கடந்த ஆண்டுத் தேர்தலில் திரு ஒபாமாவிற்கு கொடுத்த ஆதரவிற்காக ஓய்வூதியர்களைவிட பங்குப்பத்திரம் பெற்றிருப்போரை மோசமாக நடத்துவதின் மூலம் ஹிகிகீ திறமையுடன் பரிசளிக்கப்படும் விதத்தில் நடாத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஓய்வூதியம் பெற்றவர்கள் உறுதியளிக்கப்பட்ட நலன்களை பெறுவதில் சற்று கூடுதலான வாய்ப்பைக் கொண்டிருக்கலாம், ஆனால் தற்போதைய தொழிலாளர்கள் தங்களது வேலையை தொடர்ந்து வைத்திருப்பதற்கு சற்று அதிகமான ஊதியத்தையே பெறுகின்றனர்.

இத்தகைய மகத்தான தாக்குதல்களில் ஹிகிகீ நேரடியாகத் தொடர்பு கொண்டிருப்பது கார்த் தொழிலாகளர்களின் இந்த பிற்போக்குத்தன அமைப்பின் எஞ்சியிருந்த நம்பகத்தன்மையையும் அழித்து விட்டது. தங்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் வர்க்க நலன்களை தொழிலாளர்கள் பாதுகாத்தல் என்பது ஹிகிகீ மற்றும் பிற பெருநிறுவன, முதலாளித்துவ அமைப்புக்களுக்கு எதிராக ஒரு எழுச்சியை ஏற்படுத்தும், கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும். முதலாளித்துவ முறைக்கு எதிராக தொழிலாளர்கள் போராட முன்வருகையில் வர்க்க அமைப்புக்களின் புதிய வடிவங்கள் வெளிப்படும்.

நாம் கடந்த 20 ஆண்டுகளில் வேலைநிறுத்தங்கள் எண்ணிக்கை மற்றும் வேலைநிறுத்தங்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அசாதாரண முறையில் குறைந்துவிட்டது பற்றிப் பரிசீலித்துள்ளோம். 1989ல் இருந்து 2009 வரை தொழில்துறை மோதல்கள் கிட்டத்தட்ட இல்லாமல் இருந்தது, உள்நாட்டுப் போருக்கு பிந்தைய அமெரிக்காவில் இந்த இரு தசாப்தங்களையும் தனிக்காலமாக காட்டுகிறது. 1870களில் இருந்து 1980 கள் வரை ஒவ்வொரு தசாப்தத்தையும் ஆராய்ந்தால், ஒவ்வொன்றும் தொழில்துறை வர்க்கப் மோதல்களின் முக்கிய அளவுகளைக் கண்டது என்பது நிரூபணம் ஆகும். 1990கள் மற்றும் 2000கள் மட்டும் தீவிர எதிரிடையில் உள்ளன.

ஆனால் கடந்த இரு தசாபத்தங்களில் இத்தகைய மாறுபட்ட தன்மை என்பது இக்காலத்தில் இருந்த மற்றொரு முக்கிய கூறுபாட்டின் பின்னணியில் பகுத்தாராயப்பட வேண்டும்: அதாவது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மிகச் செல்வம் கொழித்த பிரிவுகளில் மகத்தான அளவிற்கு செல்வக் குவிப்பு நடந்த பின்னணியில். 1947ல் அமெரிக்க மக்களின் மிக செல்வம் படைத்த .01 சதவிகிதம் தேசிய வருமானத்தில் 1 சதவிகிததைக் கொண்டிருந்தது. இது 1929 வோல் ஸ்ட்ரீட் சரிவிற்கு முன்பு தேசிய வருமானத்தில் இப்பிரிவு கொண்டுந்த 3.61 சதவிகிதத்தைவிட குறிப்பிடத்தக்க வகையில் குறைவு ஆகும். இடைப்பட்ட ஆண்டுகள் வன்முறை நிறைந்த வர்க்கப் பூசல், தொழில்துறை அமைப்புக்களின் கூட்டமைப்பு ஏற்றம் ஆகியவற்றால் அடையாளம் காணப்படுகின்றது. 1973 ஐ ஒட்டி மிக அதிக செல்வக் கொழிப்பைக் கொண்ட .01 சதவிகிதத்தின் வருமானம் தேசிய வருமானத்தில் 0.6 என்று குறைந்து விட்டது. இந்த குறைந்த கட்டம் முந்தைய இரண்டரை தசாப்தங்களில் தொடர்ச்சியாக வர்க்க மோதல்கள் உயர்ந்த அளவில் இருந்ததின் விளைவு ஆகும்.

இந்த நிகழ்வுப்போக்கு எதிர்த் திசையில் நகர ஆரம்பித்தது--இன்னும் கூடுதலான வகையில் செல்வக் குவிப்பு மிகச் செல்வம் படைத்த .01 சதவிகிதத்திடம் 1979ல் இருந்து குவிப்பு அடைந்த விதத்தில் (உண்மையில் செல்வம் நிறைந்த 5 சதவிகிதத்தினரிடத்தில்). 1989 ஐ ஒட்டி அதன் வருமானப் பங்கு 2.3 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. 1999 ஐ ஒட்டி உயர் அடுக்கின் வருமானத்தின் பங்கு 2.92 என்று போயிற்று. கடைசியாக நமக்குப் புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ள ஆண்டான 2006ல் (பேராசிரியர்கள் றிவீநீளீமீttஹ், ஷிணீமீக்ஷ் ஆய்வின் அடிப்படையில்), செல்வம் அதிகம் உள்ள அமெரிக்கர்களின் தேசிய வருமானப் பங்கு 3.76 என்று ஆயிற்று.




மிக உயர்மட்ட 0.1 சதவிகிதத்தின் (ஒரு சதவிகிதத்தில் பத்தில் ஒரு பங்கு) வருமானப் பங்கை ஆராய்ந்தால், இந்த பிரிவு 1929ல் தேசிய வருமானத்தில் 8.7 சதவிகிதத்தைக் கொண்டிருந்தது. 1947ல் இதன் பங்கு 3.4 சதவிகிதம் குறைந்தது. அதன் மிக குறைவான கட்டத்தில் 1973ல் இருந்தது; அதன் வருமானத்தில் பங்கு 2.2 சதவிகிதம் என்று குறைந்தது. 1979ல் இது 2.7 சதவிகிதம் என்று உயர்ந்தது. 1989ல் அதன் பங்கு 5.5 சதவிகிதம் என்று எகிறியது. 1999ல் இது 8 சதவிகிதம் ஆயிற்று. 2006ல் மிக உயர்மட்ட 0.1 சதவிகிதத்தின் வருமானப் பங்கு 9.1 சதவிகிதம் என்று இருந்தது.




இறுதியில் உயர்மட்ட 1 சதவிகிதத்தில் இருப்பவர்களுடைய வருமானத்தைக் காண்போம். 1929ல் இந்த பிரிவு தேசிய வருமானத்தில் 19.8 சதவிகிதத்தைக் கொண்டிருந்தது. 1947ல் இதன் பங்கு 11.25 என்று குறைந்தது. 1973ல் மிகக் குறைவான கட்டத்தில் தேசிய வருமானத்தில் அதன் பங்கு 8.3 சதவிகிதமாக இருந்தது. 1979ல் இது சற்றே உயர்ந்து 9 சதவிகிதமாயிற்று. 1999ல் இதன் பங்கு இரு மடங்கையும்விட அதிகமாகி 18.4 சதவிகிதம் என்று இருந்தது. 2006ல் இது 20 சதவிகிதமாக இருந்தது. அதாவது மக்களில் செல்வம் படைத்த உயர்மட்ட 1% பகுதியினர் தேசியவருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டிருந்தனர்.




1947ல் இருந்து 2006 வரையில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வம் நிறைந்த பிரிவின் வருமான பங்கின் வரைபடம் இதே காலத்தில் இருந்த வேலைநிறுத்தங்கள் தரத்தின் வரைபடத்தின் மீது பதிய வைக்கப்பட்டால், இந்த இடைத்தொடர்புகளில் இருக்கும் மாறக்கூடிய கூறுபாடுகளின் உறவு மிகத் தெளிவாகத் தெரிய வரும். தொழிலிடங்களில் மிக அதிகப் போர்க்குணம், வெளிப்படையான வர்க்க மோதல்கள் ஆகியவை செல்வந்தர்களிடையே செல்வக் குறைப்பில் சரிவு ஏற்படும்போதும் சமூகச் சமத்துவமின்மையில் சரிவு ஏற்படும்போதும் தோன்றுகின்றன. சமூகப் போராட்டங்கள் நசுக்கப்படும் சூழ்நிலையில், செல்வக் குவிப்பு வெகுவிரைவில் சமுக சமத்துவமின்மையுடன் அதிகரிக்கிறது. இந்த தொடர்புடைய நிகழ்வுகளின் வரைபடம் நிரூபிப்பது போல் மிக அதிக செல்வம் படைத்த 0.1 சதவிகிதத்தனரின் செல்வக் குவிப்பும் வேலைநிறுத்த நடவடிக்கையின் அளவும் கடந்த 20 ஆண்டுகளில் மிக அதிகமாக வளர்ந்துள்ளன.



"மோதல் பகுதி" சாத்தியப்பாட்டை கொண்டுள்ளது என விவரிக்கக் கூடிய இந்த இடைவெளி சமூக "அமைதி" என்பதுடன் இயைந்திருக்க முடியாத பரிமாணங்களை அடைந்துவிட்டது. சமூக சமத்துவமின்மையைப் பொறுத்தவரையில் அமெரிக்கா இப்பொழுது பெரு மந்தநிலை 1929 க்கு முன்பு இருந்த நிலைக்கு திரும்பிவிட்டது; இதையட்டி அங்கு அப்பொழுது தொழிலாள வர்க்கத்தின் சமீப எழுச்சி ஏற்பட்டது. ஒபாமா நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க கருவிகள் சமூக மோதலை அடக்குவதின் திறனுக்கு வரம்புகள் உள்ளன. அமெரிக்காவில் சமூக முரண்பாடுகள் வர்க்கப் போராட்டம் புதிதாக வெடிக்கும் தன்மையுடன் வரக்கூடிய கட்டம் என்பதை தவிர்க்க முடியாததாக்கியுள்ளன.

ஆனால் எதிர்வரவிருக்கும் போராட்டங்கள் கடந்த கால வடிங்களை மீண்டும் மட்டும் கொண்டு வரா. இவ்வாண்டு ஆரம்பத்தில் சோசலிச சமத்துவக் கட்சி கூறியது:

சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகள் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளின் தர்க்கத்தில் இருந்து விளைகின்றன. இந்த தீவிரமாகும் நெருக்கடி அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை சமூக மற்றும் அரசியல் தீவிரமயமாக்கல் தன்மைக்கு இட்டுச்செல்லும் என்று கட்சி எதிர்பார்க்கிறது. இந்த தீவிரமயமாக்கல் வெகுஜனப் போராட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவிடும்; அவை பிற்போக்குத்தன தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவ தளைகளில் இருந்து உடைத்துக் கொள்ளும் வெகுஜன போராட்டங்களின் வளர்ச்சியாக வெளிப்பட்டு பெருகிய முறையில் அரசியல் மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு பரிமாணத்தை அடையும்.

வரலாறு மீண்டும் ஒரு தீவிர திருப்பத்தைக் கொண்டுள்ளது. கடந்த 12 மாதங்கள் புறநிலைச் சூழலில் ஒரு அசாதாரண மாற்றத்தைக் கண்டுள்ளன. மனித குலம் உலகளாவியரீதியில் ஒரு புதிய அரசியல் எழுச்சிகள் மற்றும் சமூகப் போராட்டங்கள் என்ற காலத்தில் நுழைகின்றது. இது மனித குலத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும். உலக சோசலிசப் புரட்சிக்கான புறநிலை முன்னிபந்தினைகள் மிகவிரைவில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்விதத்தில் அகநிலைக் காரணியான புரட்சிகரக் கட்சியின் பங்கு முக்கியமான வரலாற்று முக்கியத்துவத்தை பெறுகிறது. புறநிலை நிலைமை கனிதலுக்கும் தற்போதைய தொழிலாள வர்க்கத்தின் நனவுக்கும் இடையே உள்ள இடைவெளி கடக்கப்பட வேண்டும். இதற்கு எல்லாவற்றிற்கும் மேலாக சோசலிச சமத்துவக் கட்சிக்குள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்க்கப்படுதலும், அவர்களுடைய அரசியல் பயிற்றுவித்தல், மார்க்சிச கோட்பாடு மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும். 2009ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவை அவற்றின் முயற்சிகள் அனைத்தையும் இப்பணிக்காக மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஐந்து மாதங்களில் நிகழ்ந்தது ஏதும் இப்பகுப்பாய்வும் முன்னோக்கும் திருத்தப்பட வேண்டும் என்ற விதத்தில் எமக்கு நம்பிக்கை கொடுக்கவில்லை. மாறாக ஒருமுனைப்போடு, இடைவிடாமல் இந்த நெருக்கடியை நிதியத் தன்னலக் குழுவின் நலன்களுக்கேற்ப தீர்க்க வேண்டும் என்ற ஒபாமா நிர்வாகத்தின் முயற்சிகள் வர்க்க அழுத்தங்களை அதிகரிக்கத்தான் செய்யும். வெளிப்படையான வர்க்க மோதல்கள் அதன் வடிவமைப்பு, தன்மை இலக்குகள் ஆகியவை புதுப்பிக்கப்படுவதற்கான உடனடி உந்ததுதல் எப்படி இருந்தாலும், இறுதிப் பகுப்பாவில் அவை அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் உச்சக்கட்டத்தினால்தான் தீர்மானிக்கப்படும். எதிர்வரவிருக்கும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள், எழுச்சிபெற்றுவரும் சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் பகுதியாக வெளிப்படுவதுடன், அதிகாரத்தை கைப்பற்றுதல் மற்றும் சோசலிசத்திற்கான ஒரு அரசியல் போராட்டத்தின் வடிவத்தை எடுக்கும்.

Friday, September 18, 2009

சென்னை நகர்புற சேரி முஸ்லிம்கள் : கள ஆய்வியல் வரைபடம்


சென்னை நகர்புற சேரி முஸ்லிம்கள் : கள ஆய்வியல் வரைபடம்

ஹெச்.ஜி.ரசூல்




கவிஞர் சோதுகுடியானின் ஏழைமுஸ்லிம்கள் களப்பணி ஆய்வுத் தொகுப்பு குறுநூல் தமிழகத்து அடித்தள முஸ்லிம்கள் குறித்த தரவுகளின் முக்கியதொரு ஆவணமாக விளங்குகிறது.

நகர்புற சேரிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் பற்றிய அறியப்படாத உலகம் வாசகனை அதிர்ச்சியடையச் செய்கிறது.

ஆய்வின் முன்குறிப்பில் கவிஞர் சோதுகுடியான் சேரிமுஸ்லிம்கள் என தலைப்பிடுவதாக இருந்தபோது சில இஸ்லாமிய அறிவுஜீவிகளின் எதிர்ப்பால் ஏழை முஸ்லிம்கள் என தலைபிட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்.இது முஸ்லிம் அறிவுஜீவிகளின் போதாமையையும்,திறந்த உரையாடலுக்கான சாத்தியங்களை மறுப்பதாகவும் அமைந்துவிடுகிறது.

முஸ்லிம்களின் வலியும் துயரமும் மிகுந்த வாழ்க்கையை கண்டுணர்ந்து சொல்வதற்கும் முஸ்லிம்முரசு மாத இதழில் தொடராக எழுதவும் துணிந்த சோதுகுடியான் அத் தொடரை தற்போது தொடராமல்நிறுத்தியிருப்பதுவருத்தத்திற்குரிய ஒன்றாகும்.



இன வரைவியல் ஆய்வுக்கு குறிப்பிட்ட பிரதேச மக்களின் அன்றாட சமூக நடத்தைகள்,வாழ்க்கைவட்டச் சடங்குகள்,முழுமையாக பதிவு செய்யப்படவேண்டும். எனவே ஏழைமுஸ்லிம்கள் நூலை ஒரு முஸ்லிம் இனவரைவியல் தொகுப்பாக கருதுவதைவிட நகர்புற சேரி முஸ்லிம்களின் தொழில் மற்றும் சமூக, பொருளாதார ,கல்விநிலை குறித்த விவரங்களை ஆவணப்படுத்துகிற கள ஆய்வியல் தொகுப்பு என மதிப்பிடலாம்.



நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஒடுக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கு

ஆதாரமாக முஸ்லிம்களின் சமூக பொருளாதார நிலையையே மையப்படுத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மரைக்காயர்,ராவுத்தர்,லெப்பை ,ஒசாக்கள் என அறியப்பட்ட முஸ்லிம்கள் தவிர்த்த இன்னொரு பரிமாணத்தை கவிஞர் சோதுகுடியான் வெளிப்படுத்துகிறார். முஸ்லிம் சமூகத்தின் வர்க்க உள்முரண்களை பேசிவிட்டார் என்று கூட சில அறிவுஜீவிகள் விமர்சிக்ககூடும்.. இஸ்லாத்தின் சமத்துவ பொருளியல் கோட்பாடு குறித்த அக்கறை இருக்கின்ற காரணத்தாலும் அடித்தள முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கும் ,ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலைக்குமான ஆர்வத்தின் வெளிப்பாடாகவுமே கவிஞர் சோதுகுடியானின் விளிம்புநிலை முஸ்லிம்கள் குறித்த இந்த ஆவணத்தை குறிப்பிட வேண்டும்.



முஸ்லிம் பண்பாட்டு இயக்கங்கள் விரலாட்டுவதில் தொடங்கி மீடியாக்களில் ஊடக யுத்தம் செய்து கொண்டிருக்கும் துர்ப்பாக்கியமான சூழல் நம்முன் உள்ளது. முஸ்லிம் அரசியல் இயக்க்கங்கள் ஓட்டு அரசியல் அதிகாரத்தை பங்கிடுவதற்கு மட்டுமே அதிகபட்சம் முயல்கின்றன. இச் சூழலில் இந்த அதிகாரங்களும் வகாபிய மசாயில் ஆர்ப்பாட்டங்களும் முற்றிலும் விளிம்பு நிலை முஸ்லிம்களுக்கானதாக நிகழவே இல்லை என்பதை அப்பட்டமாக இத் தொகுப்பை வாசிப்பதின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது



தமிழக அறிவுஜீவிகள் சேரிமுஸ்லிம்கள் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வேளையில் இந்திய நகர்புற சேரிகளில் வாழும் முஸ்லிம்கள் நிலைகுறித்து ஆய்வு நிறுவனங்களோ,அல்லது தனிநபர் கல்விப் புலம்சார்ந்தோ சில கள ஆய்வியல் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எம்.எச்.லக்டவாலா அடித்தள முஸ்லிம்கள் கடன் பெறும் நிதி நிறுவனங்கள் குறித்த ஆய்வில் சேரிவாழ் முஸ்லிம்கள் குறித்துப் பேசுகிறார்.இந்தியாவில் நகர்புற சேரிகளில் குடியிருப்போரில் மில்லியன் கணக்கீட்டில் மிக அதிகமாக மும்பையில் 5.8,டெல்லியில் 1.82,கல்கத்தாவில் 1.49 ,சென்னையில் 1.08 மில்லியன் மக்கள் வசிப்பதாகக் குறிப்பிடுகிறார்.இதனையே அவர் மொத்த சேரி மக்கள் தொகையில் சேரிகளில் வசிக்கும் முஸ்லிம்களை சதவிகிதப்படி விளக்கும் போது மும்பையில் 28.5,டெல்லியில் 18.8

சென்னையில் 18.3,கல்கத்தாவில் 12.7 சதவிகிதமாக உள்ளனர் என தெரிவிக்கின்றனர்.(த மில்லி கெசட்,16 - 30 செப் 2004)



ரிஸ்வி சையது ஹைதர் அப்பாஸ் உத்தரபிரதேசம் லக்னோவில் முஸ்லிம்சேரிகளில் வாழும் மக்களின் சமூக பொருளாதார வாழ்நிலை குறித்த ஆய்வொன்றை நிகழ்த்தியுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் அடையாளம் காணப்பட்ட 6734 நகர்புற சேரிகளில் வசிக்கிண்றனர்.இதில் லக்னோவில் மட்டும் 639 சேரிகள் உள்ளன. மொத்த சேரி மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 27.6சதவிகிதத்தினர் இங்கு வசிக்கின்றனர்.சேரிமுஸ்லிம்களின் வாழ்நிலை மூவாயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் பெற்று வறுமை கோட்டுக்கு கீழுள்ள நிலையில் இருப்பதையும்,பாலின விகிதம் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக இருப்பதையும் இன்னும் பெண்சிசுமரணம்.ஆரம்பக் கல்விஉள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் அவற்றிற்கான மாற்று என இவ்வாய்வு முன்வைக்கப்படுகிறது.(த மில்லி கெசட் அக்டோபர் 2004)



ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் முஸ்லிம் சேரிவாழ் பெண்கள் குறித்து பி.வி.எல்.ரமணா கள ஆய்வொன்றை நிகழ்த்தி நூலாக வெளியிட்டுள்ளார்.சேரிகளில் உழைக்கும் முஸ்லிம் பெண்களின் கல்விநிலை,குழந்தைப் பேறு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைகள்,சேரியில் வளரும் பெண்களின் நிலைபாடு உள்ளிட்ட பகுதிகள் சார்ந்து இந்த ஆய்வு இயங்குகிறது.சேரி வாழ்வின் பொருளாதார நிலை, பெளதீக அடிப்படைவசதிகளின் கட்டுமானம் என்பதான எல்லைகளைத் தாண்டி சேரிப்பெண்களின்மீதான பாலின பாகுபாடும் ஒடுக்குமுறையும் சேரிப் பெண்களிடத்தில் நிகழும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் இந்த ஆய்வு கவனப்படுத்துவது குறிப்பிடத்தக்கது



கவிஞர் சோதுகுடியான் நகர்புற சேரி முஸ்லிம் கள ஆய்வுக்கு தேர்வு செய்த சென்னை பெருநகர் பகுதிக்குள் அமைந்த திருவல்லிக்கேணி நீலம்பாதுஷாதர்கா, சிட்டிசென்டர் எதிரில் அமைந்த இஸ்மாயில் கிரவுண்டு,மயிலாப்பூர் பாஷாதோட்டம். ஐஸ்ஹவுஸ் அத்திக்குண்டா,வண்ணாரப் பேட்டை லாலாகுண்டா,புரசைவாக்கம் புளியந்தோப்பு,அருகம்பாக்கம் ஆசாத்நகர்,கிருஷ்ணாம்பேட்டை குத்ரத் அலி மக்கான், வியாசர்பாடி பி.வி.காலனி, என ஒன்பது பகுதிகளாகும்.மேலும் சென்னை புறநகர் காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை,பூந்தமல்லி பட்டூர்,விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், ராமராஜபுரம் பேரூராட்சி பகுதிகளுமாகும்



ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இச் சேரிகளில் வாழும் முஸ்லிம்களின் மக்கள்தொகை ஏறத்தாழ 48,000க்கும்மேல் உள்ளது. இரண்டாயிரமும் அதற்கு கீழிலான மக்கள்தொகையை நீலம்பாஷாதர்கா ,பாஷாதோட்டம், அத்திக்குண்டா ,கிருஷ்ணாம்பேட்டை,ராமராஜபுரம் பகுதிகளைக் கொண்டுள்ளன. அதிகபட்சமாக எட்டாயிரமும் அத்ற்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட பகுதிகளாக லாலாகுண்டா,புளியந்தொப்பு பகுதிகள் அமைந்துள்ளன.

.

பொதுவான இந்த சேரிகளின் அமைவிடம், முஸ்லிம்கள் உடல் அடக்கம் செய்வதற்கு பயன்பட்ட மையவாடிகளாகவே இருக்கின்றன. குறிப்பாக ஆற்காடு நவாபால் வழங்கப்பட்ட 44 கிரவுண்டு மனையில்தான் நீலம்பாதுஷா தர்கா சேரிப்பகுதி அமைந்துள்ளது.ஹாஜி இஸ்மாயில் வக்ப் செய்தது இஸ்மாயில் கிரவுண்டு பகுதி குடியிருப்பாகியுள்ளது.இவ்வாறு வக்ப் செய்யப்பட்ட நிலங்கள் அரசாலும் தனிநபர்களாலும் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலையும் இத்தோடு கவனிக்க வேண்டியுள்ளது.இஸ்மாயில் கிரவுண்ட்டில் ஐந்தேகால் கிரவுண்டு நிலம் வீட்டுவசதிவாரியத்தால் பறிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடலாம். ஒரு கிரவுண்டு நிலம் ஒன்றரை கோடியிலிருந்து இரண்டரை கோடிவரை மதிப்பீடு கொண்டுள்ளதையும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகள் 100 - 400 சதுர அடியில் சிறு கட்டிட அமைப்பைக் கொண்ட ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு,தார்சீட்டு கவுத்திய வீடுகளாகவே பெருமளவில் உள்ளன. ஆய்வாளர் இவ் வீடுகளை ஓரிடத்தில் புறாகூண்டுகள் எனவும் மற்றொரு இடத்தில் எலிப்பொந்துகள் எனவும் குறிப்பிடும் போது அம்மக்களின் இருப்பிட நெருக்கடியை மிக எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது



கிருஷ்ணாம்பேட்டை குத்ரதலி மக்கான் முஸ்லிம் சேரியை சித்தரிக்கும்போது வேனிற்காலத்தில் ஆண்களும் பெண்களுமாக பக்கிர் எலப்பை பள்ளியின் முன்பாக வாசலில், பிளாட்பாரத்தில் படுக்கின்றனர் என்கிறார்.பிறிதொரு இடத்தில் ஒரு குறும் வீட்டிற்குள் படுக்கையறையும் சமையலறையும் எவ்வாறு மாறிமாறி அமைக்கப்படுகிறது என்பதை சமையலறை,இரவில் கட்டிலுக்கு அடியில் இருக்கும்,பகலில் கட்டில் மடித்து சுவற்றில் சாத்தப்பட்டிருக்கும் என அத்திகுண்டா பகுதி சேரிவீடுகளை அறிமுகப்படுத்தும்போது குறிப்பிடுகிறார்.



முஸ்லிம் என்ற ஒற்றை அடையாளம்தாண்டி மொழியடிப்படையில் உருதுமுஸ்லிம்,தமிழ்முஸ்லிம் என மாறுபட்ட அடையாளங்களைமுஸ்லிம்கள் கொண்டுள்ளனர்..நீலம்பாஷா தர்கா பகுதியில் எழுபத்தைந்து சதவிகிதம் உருது தக்னி முஸ்லிம்கள் சங்கராபுரத்திலும் இதுபோன்று உள்ளனர். அத்திகுண்டாபகுதியில் உருது,தமிழ் முஸ்லிம்கள் சரிசமமாகவும்,இதரபகுதிகளில் கலந்தும் வாழ்கின்றனர். பொருளாதார வாழ்நிலை,சமயநிலை ஏறத்தாழ சமமாக இருந்தபோதும் கூட உருதுகள் தமிழ்முஸ்லிம்களைப் பார்த்து லெப்பை என இளக்காரமாக சொல்வார்கள் என்ற வரிகளில் புதைந்து கிடக்கும் மேலாதிக்க மனோபாவத்தையும் ஆய்வாளர் கட்டுடைக்கத் தவறவில்லை.

நகர்புற சேரிகளில் வாழும் முஸ்லிம்களில் 98 சதவிகித்த்தினர் அடித்தள தொழில்களையே மேற்கொண்டு வருகின்றனர்



கேரள மலப்புறம் பகுதியிலிருந்து வரும் முஸ்லிம் ஆண்கள இங்குள்ள பிறமத பெண்களோடு குடித்தனம் நடத்திவிட்டு பிறகு ஓடிவிடுகின்றனர் அல்லது மரணத்தை எதிர் கொண்ட பிறகு இவ்வாறான குடும்பங்களின் வாரிசுகள் இத்தகைய பிரச்சினைகளை எதிர் கொள்கின்றன. சில குடும்பங்களின் வீடுகளில் மக்கா, மதிநா,நாகூர்பள்ளி,வேளாங்கண்ணி மாதா,இயேசு,பிள்ளையார்,சிவன் புகைப்படங்கள் இருப்பதை ஆய்வாளர் சுட்டிக்காட்டுகிறார்.இரு சமயங்களின் கலாச்சாரங்களிடையே அல்லல்பட்டு அடையாள நெருக்கடியை சந்திக்கும் குடும்பங்களாக இவை இருக்கின்றன.

தாடி, தொப்பி, ஜிப்பா என்பதான புற அடையாளங்கள் சார்ந்து ஒரு முஸ்லிம் கட்டமைக்கப்படுவதின் விளைவாகவே சங்கராபுரத்தைச் சார்ந்த ஒரு முஸ்லிமின் கூற்றுஇவ்வாறு வெளிப்படுகிறது.



சங்கராபுரம்சுற்றியுள்ளபாவளம்,மல்லாபுரம்,ஆலத்தூர்,பாலப்பட்டு,லெக்கநாயக்கன்பட்டி,உள்ளிட்ட 60 கிராமங்களில் பெயரைக் கேட்டுத்தான் முஸ்லிம் என கூற முடியும்.பார்வையிலும்,கலாசாரத்திலும் முஸ்லிம் இந்துக்கள் ஒரே இனம் போல்தான் காட்சி அளிப்பார்கள். அவர்களைவிட நாங்கள் மேல் என்பதாக இருக்கிறது



பிற இன ஆண்களோடு திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் பெண்கள், கணவனால் மூன்று,நான்கு குழந்தைகளோடு கைவிடப்பட்ட பெண்கள் என்பதைத் தவிர முஸ்லிம் பெண்கள் சந்திக்கும் மற்றுமொரு பிரச்சினை தலாக். மணமகன் செல்போனில் மணமகளை பிடிக்கவில்லை என்ற ஒற்றை வரியோடு ,முத்தலாக் சொல்வதும், மணமான மூன்று நாளில் கூட இது நிகழ்வதும், கைக்குழந்தையோடு தலாக் சொல்வதும் சகஜமான சம்பவங்களாக இருப்பதை ஆய்வாளர் குறிப்பிட்டு, தலாக்கில் குரானிய முறை எதுவும் பின்பற்றப்படாமல் கட்ட பஞ்சாயத்து முறையாக இச் சம்பவங்கள் நடைபெறுவதை விமர்சனம் செய்கிறார்.இன்னொருநிலையில் பெண்சார்ந்து மணவிடுதலை பிரச்சினை எழும்போது தலாக் கொடுக்காது இழுத்தடிப்பதும் சிரமப்பட்டு நஷ்ட ஈடாக எந்தப் பண்மும் பெறாமல் வெறும் தலாக்கே போதும் என்ற நிலையில் பெண்கள் தள்ளப்படுவது நிகழ்வதையும் சுட்டிக்காட்டுகிறார்



கள ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இப்பகுதிகளில் முஸ்லிம் குழந்தைகளின் படிப்பு பெரும்பாலும் ஆரம்பக் கல்வியோடு முடிந்து விடுகிறது. உயர்நிலை,மேல்நிலைப் படிப்பு மிக குறைந்த சதவிகிதமே காணப்படுகிறது. சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான சிறிய அளவிலான பள்ளிவாசல்கள், தர்காக்கள் உள்ளன. சில பகுதிகளில் மட்டுமே இஸ்லாமிய அரசியல் மற்றும் பண்பாட்டு இயக்கங்களின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்களது வாக்குவங்கியின் சார்பு நிலை குறித்த தகவல்கள் பெரும்பாலும் குறிப்பிடப்படவில்லை. எனினும் சங்கராபுரம் பகுதியை முன்வைத்து ஆய்வாளர் பேசும்போது,வகாபி அமைப்புகளின் தோற்றத்தால் நல்லிணக்கபாதிப்பு, அண்ணன்,தம்பி,மாமன்,மச்சான் என் அமைந்த இந்துக்கள், முஸ்லிம்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் ஒருங்கிணைக்கப்படுவதால் பிற இனமக்களும் திரட்சியுற்று பேரூராட்சி தலைவர் பஷீர்பாய் தோற்கடிக்கப்பட்ட விவரத்தை ஆய்வாளர் பதிவு செய்கிறார்



தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் அனைவருமே பங்களாவீடுகளில் வசிப்பவர்கள்,எப்போதும் பிரியாணி இறைச்சி சாப்பிடுபவர்கள் ,அரபுநாட்டு செல்வத்தில் சென்ட் வாசனையோடு திளைப்பவர்கள் வசதியாக வாழ்பவர்கள, தொழில்முதலாளிகள், அரசுப்பணி ஆசிரியப்பணியில் இருப்பவர்கள் துருக்கித் தொப்பி அணிந்த அரசியல்வாதிகள் என்பதான புனைவுகளை மட்டுமே பலர் பரப்பிவருகின்றனர்,வெகுஜன மக்களின் ம்னோபாவங்களிலும் இதுவே நிலைபெற்றுள்ளது. இதனை கட்டுடைப்பு செய்து அடித்தள முஸ்லிம்களின் வேதனைக்குரிய வாழ்வை கவிஞர் சோதுகுடியானின் இந்த கள ஆய்வியல் தொகுப்பு மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு வெளிப்படுத்துகிறது

.

முஸ்லிம்தனவந்தர்களிடம் கல்விச் செலவுக்கான பட்டியல் போட்டு ஏற்கச் சொல்வது, எழைமுஸ்லிம் பெண்களின் பிரச்சினை தீர பலதாரமணத்தை தீர்வாக வைப்பது உள்ளிட்ட சில் தீர்வுகளை நீக்கிவிட்டு அணுகிணால் அடித்தள் முஸ்லிம்களுக்கான கொள்கை உருவாக்கத்திற்கான ஒரு அடிப்படை ஆவணமாகக் கூட இதை கருதலாம்.



முஸ்லிம்களுக்கான கல்வி,வேலைவாய்ப்புபுக்கான இடஒதுக்கீட்டை நலிவடைந்த்த ஒடுக்கப்படுகிற அடித்தள முஸ்லிம்களின் சார்பாக திருப்புவதற்கு இந்த ஆவணத்தை ஒரு ஆயுதமாக நாம் பயன்படுத்தலாம்.