Saturday, March 13, 2010

ஹெச்.ஜி.ரசூல் எழுதிய புதிய திறனாய்வு பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள்


By கவிஞர் நட.சிவகுமார்

பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாத்தின் பிரதிகளை அணுகும் தமிழின் முதல்நூலென இதைச் சொல்லலாம்.

மைலாஞ்சி கவிதைநூல்வழியாக வெகுவாக அறியப்பட்ட ஹெச்.ஜி.ரசூலின் இந்தப் படைப்பு நாட்டார்மரபு துவங்கி மத்தியகிழக்கு அரபுநாடுகளிலும் உலக அளவிலும் பேச்ப்படுகிற இஸ்லாமிய மரபுகளை ஊடிழைப்பனுவலாய் மீளாய்வு செய்கிறது.பண்பாட்டு இஸ்லாம் கருத்தாக்கத்தை இதன்மூலம் வந்தடைய முடியும்.

சூபிகளின் மாற்று உரையாடல், நியோசூபிசம்,சூபி இசை,அடித்தள மக்களின் தர்காபண்பாட்டு அரசியல், வெகுஜன இஸ்லாம் என்பதான தமிழ்மண்சார் அடையாளங்களை உள்வாங்கிய இஸ்லாத்தின்பரப்பு இந்நூலின் அறிமுகமாகிறது.

காலனியாக்கத்திலிருந்து விடுதலை பெற்ற மூன்றாம் உலக நாடுகளின் முஸ்லிம் அறிஞர்கள் முன்வைக்கும் பின்காலனிய இஸ்லாமிய சிந்தனை பாசிச ஆக்ரமிப்புக்கு எதிர் அணிதிரட்டலான இஸ்லாம் அரசியல் என இதன் எல்லைகள் விரிவடைகிறது.

வகாபிசமும் நவீனமுதலாளியமும்,தெளகீதுபிராமணீயம்,ஏகத்துவ அரசியலின் தோற்றுவாய்

என மாறுபட்ட சிந்தனை உலகங்கள் விவாதத்திற்கு உட்படுத்தப்படுகிறது.

அரபுவழிப்பட்ட மரபுவழி நிறுவன இஸ்லாம் முன்வைக்கும் ஷரீஅத் குற்றவியல்தண்டனைச் சட்டங்கள்

மீள வாசிக்கப்படுகிறது.புனிதப்பிரதிகளை ஆதாரங்களாக்கி கட்டமைக்கும் அடிப்படைவாதம்,தீவிரவாதத்தை திருக்குரானின் புனிதம்சார்ந்த கற்பிதங்கள் கட்டவிழ்த்து காட்டுகிறது.

பின்நவீன அரபுப் பெண்ணியம் பிறிதொரு தளத்தின்குரல். புனைவு மொழியாடல்கள் கறுப்பு இஸ்லாம் ஜிகாத் தலித்முஸ்லிம் என சொல்லப்படாத சமகால இஸ்லாத்தின் பன்முகத்தன்மை இங்கு பரிசீலனைக்கு உள்ளாகிறது

சென்னை மருதாபதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது.இந்நூலில் கீழ்கண்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

1) சூபிகளின் மாற்று உரையாடல்

2) சூபி இசை - இதயத்திலிருந்து ஒரு செய்தி

3)வகாபிசமும் நவீன முதலாளியமும்

4)தர்கா பண்பாட்டு அரசியல்

5)நாட்டார் இஸ்லாம்

6)மவ்லிதுகளின் யதார்த்தமும் புனைவு மொழியாடல்களும்

7)தெளகீது பிராமணர்களின் கூர்மழுங்கிய வாள்களும்

வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகளும்

8)ஏகத்துவ அரசியல் மற்றும் சமயமரபுகளின் தோற்றுவாய்

9)கறுப்பு இஸ்லாம்

10)ஷரீஅத் குர்றவியல் - ஒரு மறுவிவாதம்

11)பின்நவீன அரபுப் பெண்ணியம்

12)திருக்குரானின் புனிதம்சார்ந்த கற்பிதங்கள்

13)மறுசிந்தனையில் திருக்குரான்

14)இஸ்லாமியச் சொல்லாடல்களின் பன்முகப்புரிதல்

மொத்தம் 128 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூ80/

நூல் கிடைக்குமிடம்

மருதா,2/100 5வது குறுக்குத்தெரு,குமரன்நகர்,சின்மயாநகர்,சென்னை - 92

தமிழ்நாடு,இந்தியா

பேச 09382116466

மின்னஞ்சல்

Marutha1999@rediffmail.com

No comments:

Post a Comment